வேல் வாங்கு வகுப்பு
வேல் வாங்கு வகுப்பு - அருணகிரிநாதரின் திருவகுப்பு பாடல்களில் ஒன்று. மிகவும் சக்தி வாய்ந்தது. சாதகர்களுக்கு தீயவற்றை தடுத்து நன்மைகளை பெருக்கி தரக்கூடியது. சிறை செல்லல் , ஜாதகக் கண்டம், மாந்த்ரீகத் தொல்லை, வைப்பு, மாரணம், கிரகபீடை காக்க கூடியது. சரியான உபதேசம் மூலம் இத அனுக்கிரகங்களைப் பெறலாம். வேல் வாங்குத என்பது இரண்டு பொருள் படும்; எம்பெருமான் தான் விடுத்த வேலை மீண்டு வாங்குவது அல்லது அம்மையின் கையில் இருந்து வேலை வாங்கியருள்வது என்று பொருள் படும். இந்த இரண்டு நோக்கங்களையும் ஒரு சேர தரக்கூடியது இந்தப் பாடல்.
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
திடவிய நெஞ்சுடை அடியர்இ டும்பைகெ டும்படி
தீயாங்குறை போயாழ்ந்தது 1
- மனமார எம்பெருமானைத் துதிக்கும் அடியவர்களின் துன்பம் அழியும் வகையில் தீமை எனும் குறைகள் ஒழிந்து தீர்ந்தன
செயசெய என்றிசை பரவிய எங்கள்கொ டுங்கலி
தேசாந்தர மேசாய்ந்தது 2
- எம்பெருமானுக்கு ஜெய கோஷம் எழுப்பும் எங்களது வினைகள் , எம்பெருமானைச் சாராதோர் நாட்டுக்கு ஓடியே போயின
செயலுரை நஞ்சுறழ் மயலுறு நெஞ்சினர் வஞ்சகர்
தீமான்கதர் தாமேங்கினர் 3
- நடத்தையிலும் பேச்சிலும் வெளியே தேனும் உள்ளே நஞ்சும் வைத்து மயக்கும் கள்ள உள்ளத்தினர் , கோபமிகு வஞ்சகர்கள் வெலவெலத்து நடுங்கி பயத்தில் ஏங்கினர் .
சிகரத ரங்கித மகரநெ ருங்குபெ ருங்கடல்
தீமூண்டுதன் வாய்மாண்டது 4
- மலையின் உச்சி வரையிலும் எழும்பும் கடல் அலைகளைக் கொண்டதும் வாழும் இடமாகிய பெருங்கடல்கள் நெருப்பு மூண்டு அடங்கி ஒடுங்கியது
தெரியலர் சென்றடை திசைகளில் எண்கரி சிம்பெழ
மாறாங்கிரி நூறாந்தொளை 5
சிகரநெ டுங்கிரி குகைகள்தி றந்துதி கந்தமும்
லோகாந்தமு நீர்தேங்கின 6
- 5 & 6 பகைவர்கள் பயந்து ஓடி ஒளிந்த திக்குகளில் உள்ள திக்கு யானைகள் வேலுக்கு பயந்து பிளிறிக் காட்டி கொடுக்க,மாய மலையாகிய கிரவ்ஞ்சகிரி நூறு திசைகளிலும் தொளைக்கப்பட , அதைக்கண்ட மற்ற மலைகளில் உள்ள குகைகள் பயத்தால் திறக்க, அண்டங்கள் முழுதும் அவைகளின் பயத்தால் உண்டான வியர்வை நீர் தேங்கி நின்றது ( அதனாலேயே கடல் உப்பு கரிக்கின்றதாம்).
சிறையுள் அழுந்திய குறைகள்ஒ ழிந்துசெ யங்கொடு
தேவேந்திரர் சேணாண்டனர் 7
- சிறையில் அடைபட்டு புழுங்கிக் கொண்டிருந்த தேவர்கள் தமது பின்னடைவுகள் நீங்கி பெரும் வெற்றியுடன் தேவலோகத்தை ஆட்சி புரிந்தனர்.
திரிபுவ னங்களும் ஒருபயம் இன்றிவ ளங்கெழுசீர்பூண்டற நேர்பூண்டன; 8
- மூன்று உலகங்களும் எவ்வித அசுரர் பயம் இன்றி வளம் மிகுந்து, திரு மிகுந்து தரும ஒழுக்கத்துடன் வாழ்ந்தன
விடவச னஞ்சில பறையும்வி ரிஞ்சன்வி லங்கது
கால்பூண்டுதன் மேல்தீர்ந்தனன் 9
- எம்பெருமாய் இளக்காரம் பேசிய பிரம்மனைச் சிறை செய்து அகங்காரம் அழிந்து அருள் பெற்றனன்
விகசித சுந்தர விதரண ஐந்தரு வெந்தெழில்
வீவான்பொழில் பூவாய்ந்தது 10
- தேவலோக மரங்கள் எனப்படும் கோடையிலும் செழித்து மணக்கக் கூடிய சந்தானம்,அரிசந்தனம், மந்தாரம், பாரிஜாதம் மற்றும் கற்பகம் ஆகிய ஐவகை மரங்கள் அசுரர்களால் பொசுக்கப்பட்ட நிலைமாறு மறுபடியும் சொர்கத் தோட்டம் செழிக்கத் தொடங்கியது.
விழைவுத ரும்பத சசிதன்வி ளங்கிய மங்கல
நூல்வாங்குகி லாள்வாழ்ந்தனள் 11
- எப்பொழுதும் மாறகூடிய பதவியில் உள்ள இந்தரனின் மனைவி சசிதேவி தனது மாங்கல்யத்துக்கு
வெருவி ஒதுங்கிமை யவரெவ ருஞ்சிறை வென்றித
மேலாம்படி யேமீண்டனர் 12
- பயத்தல் பதுங்கி ஒளிந்து வாழ்ந்த தேவர்கள் எவரும் தமது சிறைவாசத்தை விடுத்து மீண்டும் தேவலோகத்திற்கு வந்து சேர்ந்தனர்
விழியொர்இ ரண்டொரு பதுசத நின்றெரி கண்டகன்
மேல்வாங்கிளை கால்சாய்ந்தது 13
- தீ பொறி பறக்கும் இரண்டாயிரம் விழிகளைக் கொண்ட சிங்கமுகன் மற்றும் அவனது சுற்றத்தார் முழுதுமாய் சாய்ந்தனர்.
வெளிமுழு துந்திசை முழுதும்வி ழுங்கி எழுங்கன
சூர்மாண்டற வேர்மாய்ந்தது 14
- ஆகாயம் வரை படர்ந்து மாமரமாய் நின்ற சூரனும் அவனது குலமும் அழிந்து பட்டன
விபுதர் பயங்கெட நிருதர் தளங்கெட விண்கெடு
மேடாம்படி பாடோங்கின 15
- தேவர்களின் அச்சம் ஒழியவும் , அசுரர்களின் அஸ்திவாரங்கள் அழியவும் , அசுர பிணக்குவியல் விண்ணை முட்டும் அளவுக்கு குவிந்தன
ஊனார்ந்தகல் வானார்ந்தன; 16
- குறளிகளும் , காக்கைகளும், கழுகுகளும், பருந்துகளும் நல்ல விருந்த சாப்பாடு கிடைத்ததென அப்பினக்குவியலை உண்டு ஆர்பரித்து வானம் முழுதும் நிறைந்த வண்ணம் இருந்தன
அடவிப டுஞ்சடை மவுலியில் வெம்பணி யம்பணி
யாமாங்கதர் வாமாங்கனை 17
- வனத்தை ஒத்த சடையில் நிலவையும், பாம்புகளையும் ஆபரணமாக அணியும் சிவபெருமானின் இடப்பாகத்தவள்
அநுபவை அம்பிகை அநுதிதை அம்பைத்ரி யம்பகி
ஆசாம்பரை பாசாங்குசை 18
- உயிர்களுக்கு சிக துக்கத்தை தருபவள் ( அனுபவை ), உலகத்தின் தாய் , விவரிக்க இயலாத வரம்புடையவள் ( அனுதிதை) , அம்மா ( அம்பை), முக்கண்ணி (த்ரியம்பகி ) , திக்குகளையே ஆடையாக அணிந்தவள் ( ஆசாம்பரை), பாசம் அங்குசம் ஏந்தியவள் ( பாசாங்குசை)
அநகை அசஞ்சலை அதிகுண சுந்தரி அந்தரி
காலாந்தகி மேலாந்திரு 19
- ஒரு களங்கம் இல்லாதவள் ( அனகை) , சஞ்சலங்கள் இல்லாதவள் ( அசஞ்சலை) , சிறந்த குணங்களை உடைய அழகி ( அதிகுண சுந்தரி), அந்தரம் ஆனவள் ( ஞான ஆகாய வடிவினள்) அந்தரி , எமனையும் அழிக்க வல்லவள் (காலந்தகி), மேலான லட்சுமி தேவியானவள் (மேலாம் திரு)
அமலை அலங்க்ருதை அபிநய பங்குரை சங்கினி
மானாங்கணி ஞானாங்குரை 20-மும்மலம் அற்றவள் (அமலை), பலவித அலங்காரங்கள் பூண்டவள் (அலங்க்ருதை ) பரத சாஸ்திரத்தின் இலக்கணத்தை பதவுரை செய்யும் தேவி ஆனவள் ( அபிநய பங்குரை சங்கினி ) , மானைப் போன்ற விழி உள்ளவள் (மான் அங்கணி ) , ஞானத்தின் முளை வித்து (ஞான அங்குரை )
அணிமுக பந்திகள் சிறுபொறி சிந்தவி ளைந்தழல்
வாய்கான்றிடு நாகாங்கதை 21
- அழகிய பட வரிசைகள் தீப்பொறி சிந்தும்படி வெளிவரும் உம்ழவும் விழுங்கவும் செய்யும் பாம்புகளை அணிந்தவள் (அணிமுக பந்திகள் சிறுபொறி சிந்த விளைந்து அழல் வாய் கான்றிடு நாக அங்கதை ) ,
அபயவ ரம்புரி உபயக ரந்திகழ் அந்தணி
யாமாங்கறி தாய்மாண்பினள் 22
- அபயம் வரதம் இரண்டையும் காட்டும் கரங்களைக் கொண்ட மறையவள் (அபய வரம் புரி உபய கரம் திகழ் அந்தணியாம் ) , அடியவர் தேவையை அறிந்தளிக்கும் தாயுள்ளம் கொண்டவள் ( ஆங்கு அறி தாய் மாண்பிநள் -)
பாய்மாண்கலை வாய்மாண்புன 23
அணிகுற மின்புணர் தணிகையில் அந்தணன் இந்திர
ராசாங்கம தாராய்ந்தவன்; 24
- 23 & 24 - அத்தகைய சமானமில்லாதவள் ஆகியே பெருந்தேவி அளித்த சீர் பொருந்திய குழந்தை; யானையாகி வந்த கணேசப் பெருமானை கண்டு தாவியவலும், மானினால் நிலத்தில் அவதரித்தவளும் , அழகிய குரத்தியுமான வள்ளியை திருத்தணியில் மனம் புரிந்தவன், வேதங்களின் காவலன், தேவலோகத்து இந்திரனின் ஆட்சியை ஆராய்ந்து நிலைபடுத்தியவன்;
வடவையி டும்படி மணிமுடி பஞ்செழ விஞ்சிய
மாடாம்புடை நாடாண்டகை 25
- காளிங்க நாகத்தின் தலையில் உள்ள கிரீடங்கள் தூள் தூள் ஆகும்படி குதித்து ஆடி, அதன் தலையில் வடவைத் தீ பற்றிய வேதைனையத் தந்த மாடுகளும், ஆநிரைகளும் உடைய நாட்டின் அரசன்,
வசைகரு துங்குரு பதியொடு தம்பிய ரும்பட
வேபாண்டவர் தேரூர்ந்தவன் 26
- தீயவையே நினைக்கும் கௌரவர்களின் தலைவன் துரியோதனனும் அவன் தம்பிகளும் அடியோடு மாண்டு விழ பாண்டவர்களுக்காக தேர் செலுத்திய தெய்வம்
வளவில்வ ளர்ந்திடை மகளிர்கு விந்துத டங்குடை
வார்பூந்துகில் வார்பூம்பூயல் 27
- ஆயர்பாடியில் வளர்ந்து, இடைக்குல மாதர்கள் குழுமி நீராடும் வேளையில் அவர்களது உடைகளை வாரித் திருடிய புயலை ஒத்த பூவண்ணன்
வேயேந்திய வாயான்கழல் 28
- மலைகளும் கன்றுகள் நிறைந்த ஆவினம் முழுவதும் தன்னிலை மறக்கும் படி குழல் இசைத்த வாயன்
மருதிடை சென்றுயர் சகடுத டிந்தடர் வெம்புளை
வாய்கீண்டொரு பேய்காய்ந்தவன் 29
- மருத மரங்களுக்கு இடையே தன்னை புட்டிய உரலை இழுத்துச் சென்று அம்மரங்களைத் தகர்த்து கந்தர்வர்களுக்கு சாப விமோசனம் தந்தவன், கொக்கு வடிவில் வந்த பகாசுரனின் வாயைக் கிழித்து கொன்றவன்
மதசயி லம்பொர வரவிடு நெஞ்சினில் வஞ்சக
மாமான்பகை கோமான்றிரு 30
மருகன் நிரம்பிய மதிமுக மஞ்சரி குஞ்சரி
வாகாம்பரை தோய்காங்கேயன் 31
- 30 & 31 மதம் கொண்ட குவலயாபீடம் எனும் யானையை ஏவி விட்டவனும், நெஞ்சினில் வஞ்சக எண்ணம் மட்டுமே கொண்ட கம்சன் எனும் தன தாய்மாமனை அழித்து பகைமுடித்த சாரங்கபாணியின் மருமகனும்; முழுநிலவை ஒத்த அழகிய முகம் கொண்ட மென்மையானவளும் , ஐராவதம் எனும் யானையால் வளர்க்கப் பெற்றவளும் ஆகிய, அழகிய ஆடைகள் புனையும் தெய்வானையை கூடும் முருகன்; கங்கை மைந்தன்
மகபதி தன்பதி பகைகிழி யும்படி அன்றடல்
வாளோங்கிய வேல்வாங்கவே. 32
- குபேரனின் தலைவனாகிய இந்திரனை பகைத்த சூரன் உடல் கிழியும் படி அன்று பெரும் போர் செய்து வேலைச் செலுத்தியபோது இவை அனைத்தும் நடந்தது.
vilakkatthudan vaasikkumpozuthu innum sirappaai vilangkugirathu. nandri nanbare.
ReplyDeleteNandri Aiya... Muluthumaai purinthu kondu elutha moondru naal piditthathu.
ReplyDelete