விஜயதசமி சிறப்பு பாடல். - special song for vijayathasami

விஜயதசமி சிறப்பு பாடல்
தேவேந்திர சங்க வகுப்பு.
இந்த வகுப்பு பாடல் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது. வள்ளிமலை சட்சிதானந்த சுவாமிகள் இப்பாடலில் ஸ்ரீ வித்யம் உள்முகமாக பிரயோகிக்கப் பட்டுள்ளது என்று கூறுகிறார். ( மேற்கோள்: www .kaumaram .com. ஸ்ரீ வித்யம் பற்றி தெரிந்து கொள்ள,  http://gurujiamrita.tripod.com/sri_vidya.htm    http://shivyogi.weebly.com/srividya.html  இவ்வலை தளங்களுக்கும் டாக்டர் ஜெயபாரதியின் முகநூலுக்கும் செல்லுங்கள்.) இப்பாடலில் 16 அடிகள் உண்டு. இவற்றில் பனிரண்டு தேவியையும், ஒன்று பிள்ளையாரையும் மீதி மூன்று கந்தபெருமானையும் போற்றுகின்றன. அதில் வரும் தேவியைப் போற்றும் முதல் 12 அடிகள் இவை:  

தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடு
சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி - 1 
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை  
தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை - 2
சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித 
தாமங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை - 3
தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபோடி
தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி - 4
இரணகி ரணமட மயின்ம்ருக மதபுல கிதவிள முளையிள 
நீர்தாங்கினு டங்கிய நூல்போன்றம ருங்கினள் - 5       
இறுகிய சிறுபிறை எயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின் 
யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகோ ளுங்குயில் - 6 
இடுபலி கொடுதிரி இரவலர் யிடர்கெட விடுமன கரதல 
யேகாம்பரை யிந்திரை மொகாங்கசு மங்கலை - 7 
எழுதிய படமென யிருளறு சுடரடி இணைதொழு மவுணிகள்
ஏகாந்தசு ந்தரு பாசாங்குச சுந்தரி - 8 
கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ் - 9  
கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள் - 10       
கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழை 
காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு -  11 
கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெறவளர் 
காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன். - 12
     
தரணியில் அரணிய முரண் இரணியன் உடல் தனை நக நுதி கொடு சாடு ஓங்கு நெடும் கிரி -    இப்பூவலகில் பெருவாழ்வு வாழ்ந்து தர்மத்திற்கு முரணான காரியங்களைச் செய்த இரணியனது உடலை தனது நகத்தின் முனையால் கீறி தாக்கி அழித்த நரசிம்மத்தை அடுத்து அடக்கிய வானளாவ வளர்ந்த சரபப் பட்சி ஆனவளே... 
ஓடு ஏந்து பயங்கரி -  கையில் கபாலத்தை ஏந்திய பயங்கர உரு கொண்டவள்    
தமருக பரிபுர ஒலி கொடு நட நவில் சரணிய - உடுக்கை சிலம்பு இவைகளின் ஒலியில் அதிசய நடனமிடும் அழகிய மாது 
சதுர் மறை தாது அம்புய மந்திர வேதாந்த பரம்பரை -  நான்கு மறைகளும் குங்குமமும் சிந்தூரமும் அப்பிய அவளது திருவடிகளைத் மந்திரங்களாலும் வேதாந்தங்களாலும் துதிக்கும் பரப்ரம்மம் ஆனவள்.
சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் - கோபத்தில்  சரிந்து விழும் வளையல்களையும்,  அவிழ்ந்து விரிந்த கூந்தலையும் மொத்தத்தில் மூண்டு கொழுந்து விட்டு எரியும் தீயின் வடிவம் போன்றவள். 
சததள முகுளித தாம அங்குச மென் திரு தாள் அந்தர அம்பிகை - நூறு இதழ் கொண்ட தாமரை மலர முனைவது போன்ற ஸ்தனங்களில் மாலைகள் புரள மென்மையான பாதார விந்தங்களை உடைய சகலர்க்கும் தாயானவள் .
தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள் தட மணிமுடி பொடிதான் அம்படி செங்கையில் வாள் வாங்கிய சங்கரி -   கற்பகத் தருவின் தலைவனான இந்திரனைத் தலைவனாகக் கொண்ட தேவர்களை எதிர்த்து போரிட்ட அசுரர்களின் மணிமுடியும் ராஜ்ஜியமும் தூள் தூளாகப் போகும்படி தனது செழுமையான கையில் வாளெடுத்து வீசி சர்வத்தையும் அழித்து அடக்கி அருளுபவள் 
இரண கிரண மட மயில் ம்ருகமத புலகித இளமுலை இளநீர் தாங்கி நுடங்கிய நூல் போன்ற மருங்கினள்-  பொன்னிறமான சூரியன் கிரகணக் காலத்தில் ( அல்லது மறையும் காலத்திலும், மழைக் காலத்திலும் ; - மழைக் காலத்தில் சூரியன் மேகங்களால் மறை படும்) ஒய்யார நடை பயிலும் மயில் போன்ற நடையும், கஸ்தூரி பூசியதும், பக்தர்களின் அன்பிலும் பிள்ளைகளின் பாசத்தில் பூரிப்பதும், மேன்மையானதும், மென்மையானதும், இளநீரை யொத்த தூய்மையானதும் ஆனா கொங்கைகளைத் தாங்கியதால் ஒடிந்து விடுவது போன்று காணும் நூல் போல் மெலிந்த இடையினைக் கொண்டவள்.
இறுகிய சிறு பிறை எயிறுடை - இறுக்கம் பெற்று நிற்கும் கலை நிலவை ஒத்த பற்களை காட்டி புன்னகைத்தவளாய்    
எமபடர் எனதுயிர் கொளவரின் நான் ஏங்குதல் கண்டு எதிர் தான் என்று கொளுங் குயில் - எமனின் தூதர்கள் எனது உயிரை கவர் வரும் பொழுது எனது மனக் கவலையை கண்டு அஞ்சேல் எனக் கூறி எமை எதிர் கொண்டு காத்து அருளும் குயிலின் இனிய குரல் உடையவள்.      

இடு பலி திரி கொடு இடர் கெட இடு மன கர தல ஏகாம்பரை - செய்த பாவங்களுக்காக உலகத்தில் உழன்று அலைந்து திரியும் உயிர்களின் வேதனைகளை அகற்றி அவைகளைக் காப்பாற்றி அவற்றிற்கு வேண்டியவற்றை நல்கும் அபய வரத மத்திரையை தாங்கிய கரங்களைக் கொண்ட ஒரு தனி பர தெய்வம் ஆனவள்.  
இந்திரை - மேலான சுகங்களை நல்கக் கூடிய தேவி 
மோகாங்க சுமங்கலை -  கடைக்கண்ணிளிருந்து திருவடித்தாமரை முதல் வர்ணிக்க இயலாத அழகு படைத்த நிரந்தர கல்யாண சொருபீனி      
எழுதிய படமென இருளறு சுடரடி இணை தொழும் மவுனிகள் ஏகாந்த சுகம் தரு பாச அங்குச சுந்தரி - வரைந்த ஓவியம் போல் அகலாமல் அசையாமல் துன்பம், மாயை ஆகிய இருள்களை அகற்றக் கூடிய ஜோதி வடிவான திருவடிகளைத் தினமும் நினைந்துருகி தவமியற்றும் மவுனத்தையும், சும்மா இருத்தலையுமே சிரேமேர்கொள்ளும் முனிபுங்கவர்களுக்கு முடிவான பரசுகத்தை, பேரின்பத்தை நல்குகிற பாசம், அங்குசம் ஆகியவைகளை ஏந்தும் அழகிய வடிவினள்.   
கரணமும் மரணமும் மலமொடும் உடல் படு கடு வினை கெட நினை காலாந்தரி - ஐம்புலன்களும், சாவும், மும்மலங்களும், கூடி வருத்தும் காரணத்தால் நாம் படும் துயரங்களை அறுத்து இன்பதடி நல்கு அருள் பாலிக்கும் முக்காலத்திற்கும் முந்திய மேலானவள்   
கந்தரி- பக்தர்களின் வினைகளை ஒரு சேர இழுத்து கட்டுபவள் 
நீலாஞ்சனி - நீல நிற மை பூசியது போல் உள்ள மேனி நிறத்தவள்.
நஞ்சுமிழ் கனல் எரி கண பண குணமணி அணி பணி கண வலை மரகத காசு அம்பற கஞ்சுளி தூசாம்படி கொண்டவள் - விஷத்தை கக்குவதும், தீப்பொறி தெறிக்கும் படமெடுக்க கூடிய , பணா மகுடக் கூட்டங்களை யணிந்ததுமான , சிறந்த மாணிக்க மணியைத் தாங்கும் கால சர்ப்பங்களை வளையல்களாகவும், மரகத பச்சை நிறத்தில், காயாம்பூ நிறமுள்ள இடையுடையும், மேலங்கியும், அணியுடையாகத் தரித்திருப்பவள் 
கனை கழல் நினையலர் உயிர் அவி பயிரவி -  அவளது திர்வடிகளை நினையாமல் பாவமே தொழிலென துர்புத்திக் கொண்டவர்கள் பயந்து நடுங்கும் தர்ம சொரூபிணி 
கவுரி - வெளிர் நிறத்தவள் 
கமலை - தாமரை மலரைத் தரித்தவள், 
குழை காது ஆர்ந்த செழும் கழுநீர் தோய்ந்த பெரும் திரு - காதில் அணிகலனாக நீலோற்பல மலரைத் தரித்திருக்கும் செழிப்பே வடிவான திருமகளும் ஆனவள்.
கரை பொழி  திரு முகக் கருணையில் உலகு ஏழு கடல் நிலை பெற வளர் காவு ஏந்திய பைங்கிளி - உள்ளம் கனிந்து அவள் திரு முகத்திலிருந்து பழியும் கருணை மழையில் ஏழு உலகங்களும், ஏழு கடல்களும் நிலைத்திருக்கும் படியும், நன்கு வாழும்படியும் பரிபாலித்து அருள் செய்யும் காவந்து ( காத்தல்) செய்யும் கிளியோத்த நிறத்தாள் மொழியாள். 
மா சாம்பவி - பரமேஸ்வரர் ஸ்ரீ சம்பு நாதாரி துணைவி ஆதி பரா சக்தியானவள்.
தந்தவன் - அருளுடன் தந்த எங்கள் கந்தவேர்பெருமான்   



special song for vijayathasami
Theventhira sangga vaguppu.
this song has its own speciality. Vallimali shree satchithaanantha swaamikal claims that
the powerful Shree Vithya Manthra had been used and recited vise versa in this songs.
( reference: www.kaumaram.com. if would like to know further on Shree Vithya Manthra please refer to
 http://gurujiamrita.tripod.com/sri_vidya.htm or http://shivyogi.weebly.com/srividya.html
otherwise you can aske Drjeya Barathi in hi facebook) this song have 16 line. 12 of it praising
shree Ambika parameswary, 1 praising Lord ganesh and the remaining 3 is for Lord Muruga.
This is the song.

tharaniyi laraniya muranira niyanudal thanainaga nuthikodu
saadOnggune dungkiri yOdEnthuba yangkari - 1
Thamaruga paripura olikodu nadanavil saraNiya sathurmarai
thaathaampuya manthira vEthaanthapa ramparai - 2
sarivalai virisadai yeripurai vadivinal sathathala mukulitha
thamaangkusa mendriru thaalanthara ambikai - 3
tharupathi surarodu saruviya asurarkal thadamani mudipodi
thaanaampadi senkaiyil vaal vaangkiya sangkari - 4
iranaki ranamada mayinmruka mathapula kithavila mulaiyila
neerthaangkinu dangkiya noolpondrama runkinal -5
irukiya sirupirai eyirudai yamapadar enathuyir kolavarin
yaanEngkuthal kandethir thaanendruko lungkuyil - 6 
idupali koduthiri yiravalar yidarkeda vidumana karathala
yEgaambarai yinthirai mOgaangkasu mangkalai - 7
ezhuthiya padamena yirularu sudaradi yinaithozhu mavunikal
yekaanthasu kantharu paasaangkusa sunthari - 8
karanamu maranamu malamodu mudalpadu kaduvinai kedaninai
kaalanthari kanthari neelaanjani nanjumizh - 9
kanaleri kanapana kunamani yanipani kanavalai marakatha
kaasaambpara kanjuli thoosaampadi kondaval - 10
kanaikazhal ninaiyalar uyiravi payiravi kavurika malaikuzhai 
kaathaarnthase zhungkalzhu neerthoyntha perunthiru - 11
karaipozhi thirumuka karunaiyi lulakezhu kadanilai peravalar
kaaventhiya paingkili maasaambhavi thanthavan. - 12

meaning:

tharaniyil araniya muran iraniyan udal thanai naka nuthi kodu saadu Ongku nedum kiri - 
She is the one being the Great Sarabeshwara who destryed the anger of the Narasimha after the narasimha is being influence by the blood of Hiranyaasura, who once a great asura king but due to is evil deeds,
he was destroyed by Narasimha.
Odu enthum payangkari - she have fearful form with holding a skull on her hand.
thamaruka paripura olikodu nadanavil saraniya - she is beautiful lady who like to dance according the music of Damaruga( a musical instrument called also as udukkai) on the graves during the judgement day
sathurmarai thaathu ampuya manthira vethaantha pramaparai - she is the Ultimate goddess whose holy foot is adorned with sinthoor and kumkum minerals is being praised by all the Vedhas, manthras and vedaanthas.
sarivalai virisadai eripurai vadivinal - when she is in anger, she looks like a extremely burning fire, while her bangles dazzling in her wrists and he hairs is untied and spread
sathathala mukulitha thaama angkusa men thir thaal anthara ambikai - her garland covered bosom is look like blooming 100 petal lotus and her holy feet is so soft. she is the mother of all.
tharupathi surarodu saruviya asurarkal thada manimudi podithaan ampadi senkaiyil vaal vaangkiya sangkari - ( tharupathi - means king of  tree. it is referred to Indran as he is the king of Olympian. in heaven there is a tree called karpakam which can grant any wishes) She is the Lord shankra's wife who held the sword in her holy hand to destroy the kingdom of the demons and asuras to the dust for being evil and waged war on the Olympians.
irana kirana madamayil mrukamatha pulakitha ilamulai ilaneer thaangki nudangkiya nool pondra marunkinal - when there is Apocalypse or the golden sun disappearing due to the rainy clouds, the peacock will start to walk so delicately and begin to dance. Thevis walk is like that. her bosom is being adorned by nice fragrances, soft, pure and which booms due to love of her children and bakthas.
her thread-like very slim waist looks like about to break with the weight of her bosoms. she is such soft and beautiful
irukiya siru pirai eyirudai - her tooth looks like hardened halfmoon and she is smiling at me showing such tooth.
emapadar enathu uyir kolavarin yaan Engkuthal kandu ethir thaan endru kolum kuyil - she is the one who sounds like nightingle calms me with the words "do not fear" and protects me when m being scared by the presence of the death messengers.
idu pali thiri kodu idar keda idu mana kara thala  ekaamparai - she is the one showing the signs of blessings and protections ( varatham and abhayam) in her hands for the souls which roaming for their sins by cleansing the sins and bless them with happiness and all their needs.
inthirai - she is the one grants happiness ever after
mogaangka sumangkalai - she is in the ever bride form and admirable.
ezhuthiya padamena irul aru sudar adi inai thozhum mavunikal ekaantha sukam tharum paasa angkusa sunthari - she is the one who holds the paasam ( rope) and angkusam ( the tool to control elephants) and grants the ultimate happiness and peacefulness to the saints and yogis who being still like status and concentration on her holy feet which drives away the darkness and evil.
karanamum maranamum malamodum udal padu kadu vinai kedaninai kaalanthari - she is the one who above all the time ( past present and future) and blesses all the souls by vanishing all the sufferings due to the sins committed by panchentriya ( eyes, nose, ears, mouth and body), death sufferings, sufferings due to the three ultimate impurities.
kanthari - she is the who ties all the sufferings of the souls and destroys them.
neelaanjani - she have ink blue complexion
nanju umizh kanal eri kanapana kunamani anipani kana valai marakatha kaasu ambpara kanjuli thoosaampadi kondaval - she wears the venomous multiple headed snakes which breathes fire and holds gems in the head as her bangles; emerald green and flowerish black color clothes being adorning her waist and chest.
kanaikazhal ninaiyalar uyir avi payiravi - she is fearsome to those who never thought of her holy feet and intend to do only evil things.
kavuri -she has a fair complexion
kamalai - she has lotus as her adornment and seat.
kuzhai kaathu aarntha sezhum kazhu neer thoyntha perum thiru - she is the wealthy Laxmi  Devi who wears hyacinth as her ear adornment.
karai pozhi thirumuka karunaiyi ulaku ezhukadal nilai pera valar kaaventhiya paingkili -
she is the on who protects and sustains all the seven worlds and seven seas with her blessing thorough her face and grace through her eyes. she is the one beautiful like the parrot and being the protective energy of all the worlds.
maa saambavi - she is the consort of the almight shiva Sambo.
thanthavan - and you are the son of such a greatness.










  


             

Comments

Popular Posts