வேல் வகுப்பு
அருணகிரி பெருமான் பாடிய 25 திருவகுப்புகளில் மூன்றாவது இது. வேலின் புகழையும் அதனை அடிபரவும் நன்மையையும் தேனான சந்தத்தில் தெவிட்டாத தெள்ளமுது போன்ற தமிழில் அமைந்தது. அருள் வாய்ந்தது, பெருமை வாய்ந்தது, சக்தி வாய்ந்தது...
வேலைப் பற்றி....
கடவுளர்களின் ஆயுதங்களுள் தலைமையானது வேல்...
சிவன், சக்தி முருகன் இம்மூவரின் அம்சம் நிறைந்தது...
அமபிகையில் நிழலையே சிவபெருமான் வேலாக்கி படைக்கலங்களில் தலைமைப் படைக்கலமாக முருகப் பெருமானுக்கு தந்தருளினார் என்பர்.
முழுக்க முழுக்க ஞான சக்தி வடிவானது...
எம்பெருமான் முருகன் இச்சா சக்தியான ஷாமள சொரூபி வள்ளியைப் பிரிவார்; கிரியா சக்தியான கௌரி சொரூபி தெய்வானையை பிரிவார்; ஆனால் ஞானசக்தியை வேலை எக்கணமும் பிரியார்.. அதை தண்டாயுதமாகவாவது செய்து ஆண்டி சொரூபத்தில் நிற்பார்...
வேல் வெற்றி, சக்தி, ஞானம், வீரம், அழகு, நன்மை, ஆண்மை, புகழ் இன்னும் பிற மேன்மைகள் அனைத்தும் கலந்ததாகும்.
கிருபானந்த வாரியார் அடிக்கடி சொல்வார்கள்: சிவ பெருமானின் திரிசூலம் அழித்தலின் முழுவுரு, ஆயுதங்களில் முழுமையானதும் முதன்மையானதும் ஆனது விஷ்ணுவின் சுதர்சன சக்கரம்; அம்பிகையின் வாள் மொத்தத்தில் வீரத்தின் முழு உரு, இப்படி கடவுள் அனைவரும் பெருமை வாய்ந்த ஆயுதங்களை ஏந்தி நின்றாலும். மேல் கூறிய வெற்றி, சக்தி, ஞானம், வீரம், அழகு போன்றவை அடைமொழியாகவும் புகழ் மொழியாகவும் விளங்குவது வேல் மட்டும்தான். வெற்றிவேல், வீரவேல் என்று வேலுக்குத்தான் இவைகள் தங்கும், வேல்தான் இவற்றைத் தாங்கும்...
இதோ அப்படி பட்ட வேலைப் புகழும் வேல் வகுப்பு...
பருத்த முலை சிறுத்த இடை வெளுத்த நகை கறுத்த குழல் சிவத்த இதழ்
மறச் சிறுமி விழிக்கு நிகராகும் - 1
பனைக்கை முக படக் கரட மதத் தவள கசக்கடவுள் பதத்திடு நிகளத்து
முளை தெறிக்க அரமாகும் - 2
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு கவிப்புலவன் இசைக்குருகி
வரைக்குகையை இடித்து வழி காணும் - 3
பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் ஒழித்தவுனர் உரத்துதிர
நிணத்தசைகள் புசிக்க அருள் நேரும் - 4
சுரர்க்கும்முனி வரர்க்கும்மக பதிக்கும்விதி தனக்குமரி தனக்கும்நரர்
தமக்குமுறும் இடுக்கண் வினைசாடும். - 5
சுடர்பரிதி ஒளிப்பநில ஒழுக்குமதி ஒளிப்ப அலை அடக்குதழல்
ஒளிப்பவொளிர் ஒளிப்பிரபை வீசும் - 6
துதிக்கும்மடி யாவர்கொருவர் கெடுக்க இடர் நினைக்கினவர் குலத்தைமுத
லறக்களையும் எனக்கோர் துணையாகும் - 7
சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை யடுத்தபகை யறுத்தெறிய
வுருக்கிஎழு மறத்தை நிலைகாணும். - 8
தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல்
படைத்த இறைகழர்க் குநிகராகும் - 9
தளத்திலுள கணத்தொகுதி களிப்பினுண வழைப்பதென மலர்க்கமல
கரத்தின்முனை விதிர்க்கவளை வாகும் - 10
தனித்துவழி நடக்குமென திடத்துமொரு வளத்துமிரு புறத்துமரு
கடுத்திரவு பகற்றுணைய தாகும் - 11
சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமோடு சூடும் - 12
திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது குடித்துடையும் உடைப்படைய
அடைத்துதிர நிறைத்துவி ளையாடும் - 13
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்தெதென முகட்டினிடை
பறக்கவர விசைத்ததிர வோடும். - 14
சினத்தவுனர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள் சிரித்தெயிறு
கடித்துவிழி விழித்தலற மோதும் - 15
திருத்தணியில் உதித்தருளும் மொருத்தன்மலை விருத்தனென துளத்திலுறை
கருத்தன்மயில் நடத்துகு கன்வேலே - 16.
பொருள் :

பருத்த முலை - படைத்தல் தொழில் அம்சம் ( கருவீன்ற தாயின் ஸ்தனங்கள் பால் பெருகுவதன் காரணமாய் பருத்து இருக்கும்.)
சிறுத்த இடை - காத்தல் தொழில் அம்சம் ( மானத்தைக் காக்க இடையில் ஆடை அணிகிறோம்)
வெளுத்த நகை - அழித்தல் தொழில் அம்சம் (மலங்கள் அழியும் போது நிர்மலமான புன்னகை ஞானத்தின் வெளிப்பாடு).
கறுத்த குழல் - மறைத்தல் தொழில் அம்சம் ( அம்பிகையின் மயிர்க்கால்களில் உள்ள கிருமி கொத்துகளே எண்ணற்ற ஜீவராசிகள் என்று பாகவதம் போற்றுகிறது)
சிவத்த இதழ் - அருளால் தொழில் அம்சம் ( அருளும் வரங்களும் ஈந்து ஈந்து சிவந்த இதழ்களை கொண்டிருக்கிறாள்)
மறச் சிறுமி விழிக்கு நிகராகும் - முருகனின் சப்த தேவியர் அம்சமானவள் கௌமாரி ; மரகத பச்சை நிறத்தவள், யாமளை, அருளுக்கும் கருணைக்கும் முதன்மையானவள். அம்பிகை பெருங்கருணை கொண்டு பேரருள் புரியும் போது பச்சை நிறமாகக் கொள்ளப் படுகிறாள். அவளின் கடைக்கண் பார்வையே இவ்வுலகிலும் அவ்வுலகிலும் எல்லா சம்பத்துகளையும் வாரி இறைக்கும். அத்தகைய விழிக்கு நிகரானது எம்பெருமானின் வேல்.
> ஐந்தொழில் புரிகின்ற இச்சா சக்தியான வள்ளித் தாயாரின் பேரருள் மிகுந்த கடைக்கண் பார்வைக்கு ஒப்பானது வேலின் அருளுடைமை.

பனைக்கை - பனையை போல நீண்டு வளர்ந்த துதிக்கையும்
முகப் படம் - அலங்கரிக்கப் பட்டம் முகமும்
கரட மதம் - மதநீர் தாங்கும் கபாலமும்
தவள கச கடவுள் - வெண்ணிற யானையின் தலைவன் - ஐராவதம் ஏறும் இந்திரன்
பதத்து இடு நிகளத்து - காலில் இடப்பட்ட விலங்கின்
முளை தெறிக்க அறமாகும். - முனை தெறித்து அறும் படி அறுக்கும் அறத்தை போன்றது.
> தேவர்களின் பினைச் சங்கிலியை அறுத்து அவர்களை சிறை மீட்ட வேல் நம் துன்பங்களை அறுத்து இன்பம் நல்கும் தன்மை கொண்டது.

பழுத்த அமுது தமிழ்ப்பலகை - என்றும் அழியாத பழைமை வாய்ந்த தமிழுக்கு அமைக்கப் பட்ட சங்கத்தின்
இருக்கும் ஒரு கவிப்புலவன் - தலைமைப் பொறுப்பில் இருக்கும் நக்கீர தேவரின்
இசைக்கு உருகி - திருமுருகாற்றுபடையின் இனிமைக்கு உருகி
வரைக்குகையை இடித்து வழிகாணும் - கட்கிமுகி என்ற பூதத்தால் சிறை வைக்கப் பட்டிருந்த அவரையும் இன்னும் பிற 999 பேரையும் குகையை உடைத்து அப்பூதத்தைக் கொன்று அவர்களை காத்தது.
> முருகனை மனமுருகி தமிழில் துதி செய்து அழைப்போரை தீய சக்தியினின்று காக்கும் தன்மை கொண்டது.

பசித்து அலகை முசித்து அழுது முறை படுதல் ஒழித்து - தேவர் படையில் உள்ள பேய்கள் பசியால் மெலிந்து அழுது முறையிட்டபோது அவற்றின் சோகம் நீக்க திருவுளம் கொண்டு
அவுணர் உரத்து உதிர நிணத் தசைகள் புசிக்க அருள் நேரும் - தனது மறக்கருணையால் அழிக்கப் பட்ட அசுரர்களின் உதிரமும் கொழுப்பும் தோய்ந்த தசைகளை தின்னக் கொடுத்து அருள் செய்யும்.
> எக்குலமே இருந்தாலும், பேயே ஆயினும் எம்பெருமானிடம் முறையிட்ட மாத்திரத்தில் அவர்கள் துன்பம் நீங்க வேல் வகை செய்யும்.

சுரர்க்கும், முனிவரர்க்கும், மகபதிக்கும் - தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், இந்திரனுக்கும்
விதி தனக்கும், அறி தனக்கும் நரர் தமக்கும் - பிரம்மா, விஷ்ணு மற்றும் மானிடர்கள் அனைவருக்கும்
உறும் இடுக்கண் வினை சாடும் - விளையும் கேடுகளை அழித்து உய்விக்கும்.
> உலகின் கடவுளர்கள் முதல் மானிடர்கள் வரை தொழுதோம்பின் அவர்களாது வினைகளை நீக்க வேல் பறந்து ஓடி வரும்.

சுடர் பரிதி ஒளிப்ப - செஞ்சுடரான சொறியனும் கூசி ஒளிந்து கொள்ளும்;
நிலவு ஒழுக்கு மதி ஒளிப்ப - குளிர் கிரணம் சொரியும் வெங்கதிரான கலையும் கூசி ஒளிந்து கொள்ளும்;
அலை அடக்கு தழல் ஒளிப்ப - கடலையும் குடிக்கும் தன்மை வாய்ந்த வடவ முகாக்கினியும் கூசி ஒளிந்து கொள்ளும்;
ஒளிர் ஒளி பிரபை வீசும். - அளவுக்கு பேரொளி பிழம்பாய் ஞான ஒளி வீசும்.
> இவ்வுலகின் முச்சுடர்களைத் தாண்டி பேரொளியான ஞானத்தை பரப்பும் தன்மை பொருந்தியது வேல்...
துதிக்குமடி யவர்கொருவர் கெடுக்க இடர் நினைக்கினவர் குலத்தைமுத
லறக்களையும் எனக்கோர் துணையாகும் - 7
> வணங்கும் அடியார்களை ஒருவர் கெடுக்க நினைத்த மாத்திரத்தில் அவர் குலத்தையே அடியோடு களைந்து எடுக்கும் வேல் எனக்கு பெரும் துணையாக நிற்கும்.

சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை - தெய்வத் திருவமுதான திருப்புகழை படிப்பவரை
அடுத்த பகை அறுத்தெறிய உருக்கி எழும் - எதிர்கொண்டு வரும் எத்தகைய பகையையும் தகர்த்து எறிய வீறு கொண்டு எழும்.
அறத்தை நிலை காணும் - தர்மத்தை நிலை நாட்டும்.
> திருப்புகழை படிப்பவர்களை எம்பெருமானின் கை வேல் சூழ்ந்துள்ள பகையை விரட்டி தர்மத்தை நிலை நாட்டி அவர்களுக்கு நன்மை செய்யும்.

தருக்கி - செருக்குற்று; நமன் முறுக்க வரின் - எமன் நமது உயிரை பாசக் கயிறு கொண்டு முறுக்க வரும் பொழுது;
எருக்கு மதி தரித்த முடி படைத்த விறல் - எருக்க இலையும், பிறை கலையையும் தரித்த சிவபெருமான்
படைத்த இறை கழலுக்கு நிகராகும் - அவரது திருவடி தாமரைக்கும் நிகராகும்.
( முற்காலத்தில் மார்க்கண்டேய முனிவர் 16 வயதில் இறப்பார் என்று தெரிந்து சிவனை நோக்கி பூஜை செய்த பொழுது எமன் அவரை காவு கொள்ள பாசக் கயிறை வீசினான். நமச்சிவாய என்று கூறி மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைத் தழுவ அல்லிங்கத்தை பிளந்து கொண்டு வந்த முக்கண் பெருமான் எமனை உதைத்து தள்ளி முனிவரை மீட்டு நீடூழி வாழ அருளினார். அத்தகைய திருவடிக்கு நிகாராக எமனையும் உதைத்து நம்மை வேல் காக்கும்.)
> மார்க்கண்டேயரைக் காக்க எமனையே உதைத்து தள்ளியே அச்சிவபெருமானின் பாத கமலத்திற்கு ஒப்ப நம்மை யமனிடமிருந்தும், மரண பயத்திலிருந்தும் எம்பெருமான் வேல் நமை காக்கும்.

தளத்தில் உள கணத் தொகுதி களிப்பின் உண அழைப்பதென - எம்பெருமானின் தளத்தில் / இடத்தில் உள்ள அடியார்களை அவர்கள் பசி தீர்ந்து மகிழும் பொருட்டு உணவுண்ண எம்பெருமான் திருக்கரம் அசைகையில்
மலர் கமல கரத்தின் முனை விதிர்க்க வளைவாகும் - எம்பெருமானின் கை அசையும் முன்பே வேல் அசைந்து வளைந்து கொடுத்து பக்தர்களை சாப்பிட அழைக்கும்.
வேல் எதற்கும் வளையாதது; ஈடு இணையில்லாதது; பக்தர்களின் துயரனைத்தும் போக்க வல்லது. ஆனால் தம்பிரான் அடியார்களின் பசிக்கு முன் வளைந்து கொடுத்து அவர்களை எம்பிரான் அழைக்கும் முன்னே தானே வளைந்து பசியாற அழைக்கிறது. இப்பொழுதும் அன்ன தான பூஜையில் வேலைத்தான் சாதத்தின் வைத்து பூஜிக்கிறார்கள்.
> எம்பெருமானின் அடியார்கள் பசியால் வாடாதிருக்க அவர் அழைக்கும் முன்னே அவர்களுக்கு பசியாற வேல் வகை செய்யும் தன்மை கொண்டது.
தனித்துவழி நடக்குமென திடத்துமொரு வலத்துமிரு புறத்துமரு
கடுத்திரவு பகற்றுணைய தாகும் - 11
தனித்து வழி நடக்கும் எனது இடத்தும் ஒரு வலத்தும் - தனித்து நான் செல்லுகையில் எனது இடப்புறமும், வலப்புறமும்,
இரு புறத்தும், அருகு அடுத்து இரவு பகல் துணை அதாகும் - முன் புறமும் பின் புறமும் அருகே இருந்து இரவு பகலாய் நமக்கு துணை இருந்து காக்கும்.
>

Comments
Post a Comment