navarathiri 7th song


வேல் விருத்தம்  - 2-ஆம் பாடல்
வெங்காள கண்டர் - என்று தொடங்கும் பாடலின் இரண்டாம் பாகம்.

கங்காளி சாமுண்டி வராகி இந்த்ராணி 
கௌமாரி கமலாசனக்

கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவி யமலை
கௌரி காமாட்சி சைவ

சிங்காரி யாமளை பவானி கார்த்திகை கொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வா 

சிறுவன் ஆறுமுகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொற்றிருக்கை வேலே... 

கங்காளி - ஊழிக்கால நடனமிடும் காளி // ருத்ரப் பெருமானின் சக்தியானவள் 
சாமுண்டி - மகிஷா வதம் செய்து அவன் தலை மேல் நிற்கும் தேவி // தர்ம சொருபியான வீரபத்திரக் கடவுளின் சக்தியாக விளங்குபவள் 
வராகி - உலகைக் காக்கும் வராக மூர்த்தியின் சக்தியானவள் // யம சக்தியாகவும் திகழ்பவள்   
இந்த்ராணி - இவ்வுலக இன்பங்கள் நல்கும் இந்திரனின் சக்தியானவள் 
கௌமாரி - சர்வ லோக ஸ்ருஷ்டி ஸ்திதி பரிபாலனம் செய்யும் முருகப் பெருமானின் சக்தியானவள் 
கமலாசனக் கன்னி - பிரம்மா தேவரின் சக்தியான பிராமி ஆனவள் 
நாரணி -  காத்தல் தொழில் செய்யும் திருமாலின் சக்தியானவள்    
******  இதில்  குறிக்க பெரும் முதல் ஏழு பெயர்களும் அம்மையின் சப்த கன்னிகா சொரூபங்களாகும் // இப்பாடல் வழி வேலினை ஏழுபேரும் சக்திகளாகவும் அருணை பெருமானார் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்.  ****
குமரி - எப்போதும் இளமையாகவே இருப்பவள் ( பாலாம்பிகை)
த்ரிபுரை -  திரிபுரம் எரித்த கடவுளின் இடப்புறம் ஆனவள் 
பயிரவி - பைரவ மூர்த்தியின் சக்தியானவள் 
அமலை - நிர்மலம் ஆனவள். ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்கள் அற்றவள் 
கௌரி - வெளிர் நிறத்தவள் 
காமாட்சி - அடியவர் ஆசைகளை நிறைவேற்றக் கூடிய கடைக்கண் பார்வையைக் கொண்டவள் -
சைவ சிங்காரி - பேரழகியான சிவ பெருமானின் சக்தி 
யாமளை - நீல நிறத்தவள் 
பவானி - சம்சாரக் கடலைக் கடக்க அருள்பவள்  
கார்த்திகை - கார்த்திகை மாதர்களாய் முருகனைப்  பேணியவள் 
கொற்றி - போர்க்களத்திற்கு தலைமையாய் இருப்பவள்   
த்ரியம்பகி - முக்கண் உடையவள்  
அளித்த செல்வச் சிறுவன் - ஆகிய தாய் அளித்த அருமை குழந்தையான  
ஆறுமுகன் முருகன் - ஆறு முகங்களை கொண்ட கந்தக் கடவுள்  
நிருதர்கள் குல அந்தகன் - அரக்கர்களை அவர்தம் குலத்தோடு அழிக்க வந்த நிர்மூலக் கடவுள் 
செம்பொன் திருக்கை வேலே -  கையில் அமர்ந்திருக்கும் பொன் வேலே.

   
vel viruththam - 2nd song
the 2nd part of the song started as - vengkaala kandar

kangkaali saamundi varaaki inthraani
gowmaari kamalaasanak

kanni naarani kumari thripurai payiravi yamalai
gowri kamaatchi saiva

singaari yaamalai bavaani kaarthikai kotri
thriyambaki alittha selva

chiruvan arumukan nirutharkal kulaanthakan
sempotrirukkai vele ... 

meaning:

kangkaali - she is the activating force of ruthra // the great kaali matha
saamundi - the one destroyed the mahishasuran and stands on the head // activating for of the Lord Veerabathra, the god of justice
varaaki - she is the activating force of the varahaa, who is protecting this world. // she also being the yama sakthi
inthraani - the activating force of the Lord Indra, the leader of the olympians
gowmaari - the sakthi of lord Mururga
kamalaasanak kanni - Biraami, the activating force the lord Brahma
naarani - the activating force of the lord vishnu
****** the above mentioned names are also known as sabtha kanniyar ( seven virgins). they are sent to assist Thurka in her quest to destroy mahishasura // by this praise, Rev. Arunakiri points out that the Vel  also can be seen as the 7 core energies fro the aathi sakthi ****
kumari - she is ever young ( known as balambikai)
thripurai - she is consort of the Lord Shiva, who destroys the thiripura.
payiravi - sakthi of the bairava moorthy
amalai - she is without the three core impurities.
gowri - she is with fair complexion
kamaatchi - she owns the eye which can grant all the wishes of her devotees.
saiva singaari - the most beautiful wife of the Lord shiva.
yaamalai - she is with blue complexion
bavaani - she is the one helps the souls to pass through the ocean of the materialistic desires
kaarthikai - she is the one took care of lord muruka as six kaarthikai maidens
kotri - she is the general of the battlefield
thriyambaki - she have three eyes
alittha selvach chiruvan - and lord murukan is the pampered son of he such mother
arumukan murukan - with six faces, and most adorable
nirutharkal kula anthkan - the one who destroyed the whole asuras
sempon thirukkai vele - and you oh golden spear, you are in the hand of a such great god.  

Comments