vijayathasami song.
பாடல் 916 - வயலூர்
வாளின் முனையினு - என்று தொடங்கும் பாடலின் இரண்டாம் பாகம்.
இப்பாடலின் எண்ணைப் பார்த்தோமானால் 916 என்று இருக்கும். தற்போதைய தரமான தங்கத்தைக் குறிக்கும் எண் அது. இப்பாடலும் அப்படியே.
அன்னையை பொன்னிற மேனியள் என்றும் வர்ணிப்பதோடு மட்டுமல்லாமல் முருகன் வேலையும் மயிலையும் நினைபவர்களைக் கண்டிப்பாக முருகன் காத்தருள் புரிந்து அவர்களின் துயர் போக்கி செல்வங்களையும் நண்மைகளையும் வழங்குவான் என்று உறுதி கூறுகிறது.
காளி திரிபுரை யந்தரி சுந்தரி
நீலி கவுரிப யன்க்கரி சங்கரி
காரு ணியசிவை குண்டலி சண்டிகை - த்ரிபுராரி
காதல் மனைவிப ரம்பரை யம்பிகை
ஆதி மலைமகள் மங்கலை பிங்கலை
கான நடனமு கந்தவள் செந்திரு - அயன்மாது
வேளி னிரதிய ருந்ததி யிந்திர
தேவி முதல்வரவ ணங்குத்ரி யம்பகி
மேக வடிவர்பின் வந்தவள் தந்தரு - லிளையோனே
வேலு மயிலுனி நைந்தவர் தந்துயர்
தீர வருள்தரு கந்தநி ரந்தர
மேலை வயலையு கந்துள நின்றருள் - பெருமாளே
காளி - காளி தேவியானவள்
திரிபுரை - முப்புரம் எரித்த சிவனின் துணைவி ஆனவள்
அந்தரி - முடிவற்றவள்
சுந்தரி - பேரழகி
நீலி - கோபமிகு துர்க்கை
கவுரி - வெளிர் நிறத்தவள்
பயங்கரி - கெட்ட துட்டர்களை மிரண்டோடச் செய்யும் உருவம் கொண்டவள்
சங்கரி - ஊழிக் கடவுளின் சக்தியானவள்
காருணிய சிவை - பெரும் கருணை கொண்ட சிவன் மனைவி
குண்டலி - ஆதர சக்தி ஆனவள்
சண்டிகை - துர்கையின் வடிவம் கொண்டவள்
த்ரிபுராரி காதல் மனைவி - திரிபுரம் எரித்த விரிசடையானின் அன்பு கொஞ்சும் இல்லாள்
பரம்பரை - முழுமுதல் தெய்வம் ஆனவள்
அம்பிகை - உலகத் தாயானவள்
ஆதி மலைமகள் - மலைகளின் அரசன் இமவான் பெற்ற மகள்.
மங்கலை - மங்கள குணங்கள் நிறைந்தவள்
பிங்கலை - பொன்னிற மேனியள்
கான நடனம் உகந்தவள் - காளியான பொது இடுகாட்டில் நடனம் புரிய விரும்புபவள்
செம் திரு, அயன் மாது, வேளினி, ரதி, அருந்ததி, இந்திர தேவி முதல்வர் வணங்கு த்ரியம்பகி - செழிப்புள்ள லட்சுமி, பிரம்மனின் துணைவி கலையரசி , குமார சக்தி கௌமாரி, மன்மதனின் துணையான் ரதி, ரிஷிலோகத் தலைவரான வசிஷ்டரின் பத்தினி அருந்ததி, தேவர் குலத் தலைவி இந்திராணி முதலானோர் வணங்கிப் பணியும் முக்கண் முதல்வி
மேக வடிவர் பின் வந்தவள் - மேக வர்ணம் கொண்ட திருமாலின் பின் பிறந்தவள்
தந்தருள் இளையோனே - ஈந்து அருள் செய்த முருகப் பெருமானே..
***
வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர் தீர அருள் தரும் கந்த - வேலையும் மயிலையும் நினைத்து தொழும் பக்தர்களுக்கு அவர்களது இன்னல்களைத் தீர்க்க உடனே வந்தருளும் எம்பெருமான் முருகா...
நிரந்தர மேலை வயலை உகந்து உள நின்றருள் பெருமாளே - மேலான திருவயலூரில் அனைவரும் விரும்பும் வண்ணம் நிரந்தரமாய் நின்று அருள் தரும் பெருமானே...
song 916 - vayaloor
the secon part of the song starts -vaalin munaiyinu
if noticed, the song number is 916. that is the current indication code for the latest gold standard valuation. 916 is considered a very good completion of gold.
even this song is like a pure gold. there is a part of the song praise thevi as she have the golden complexion.
not only that, this song assures that whoever remembers Oyur great lords spear and peacock will be blessed and granted with all the prosperities, wealth and will be protected from all the bad things and unhappiness.
kaaLi thiripurai yanthari sunthari
neeli kavuripa yangari sangari
kaaru Niyasivai kuNdali chaNdikai ...... thripuraari
kaathal manaivipa ramparai yampikai
aathi malaimakaL mangalai pingalai
kaana nadanamu kanthavaL senthiru ...... ayanmaathu
vELi nirathiya runthathi yinthira
thEvi muthalvarva Nanguthri yampaki
mEka vadivarpin vanthavaL thantharu ...... LiLaiyOnE
vElu mayiluni nainthavar thanthuyar
theera varuLtharu kanthani ranthara
mElai vayalaiyu kanthuLa ninRaruL ...... perumaaLE.
......... Meaning .........
kaaLi - She is black
thiripurai - the wife of the Lord Shiva who burnt down the thiripura;
anthari - She has the form of the stratosphere;
sunthari - She is beautiful;
neeli - She is KaaLi,
kavuri - She is Gowri,
payangari - she is feared by the asuras and demons.
sangari - she is the wife of the shankara, the destroyer.
kaaruNiya sivai - She is the compassionate Mother, sakthi of the parameswara
kuNdali - the pure personification of delusion
chaNdikai - She is Durga
thripuraari kaathal manaivi - She is the beloved consort of Lord SivA who burnt down His enemies of Thiripuram
paramparai - she is the ultimate energy/power or brahma
ampikai- Primeval Goddess Mother
aathi malai makaL - She is the daughter of the ancient Mountain king Himavaan
mangalai- She is the One wearing the holy thread of marriage around Her neck forever
pingalai - Her complexion is golden hue
kaana nadanam ukanthavaL - She loves to dance on the cremation ground during the judgement day
sem thiru, ayan maathu, vELini, rathi, arunthathi,inthira thEvi muthalvar vaNangum thri ampaki - She is the three-eyed Goddess worshipped by the wealthy and properous Lakshmi, Saraswathi the consort of Lord Brahma, Gowmaari the sakthi form of Lord muruga, Rathi the consort of Manmathan, Arundhathi (the spouse of Sage Vasishtar), IndirAni the queen of Indra and other deities
mEka vadivar pin vanthavaL - She is the younger sister of Lord VishNu of the hue of the black cloud
thanthu aruL iLaiyOnE - and You are the younger son of that PArvathi, Oh Lord!
vElum mayilum ninainthavar tham thuyar theera aruL tharu kantha - Removing the distress of Your devotees who contemplate on Your holy spear and peacock,
niranthara mElai vayalai ukanthu u(L)La(m) ninRu aruL perumaaLE - You shower upon them Your grace, Oh KandhA! In this immortal town of West VayalUr, You have Your abode with relish, graciously blessing all, Oh Great One!
Comments
Post a Comment