பாடல் 696 -திருமயிலை 
நிறைதரு மணியணி - என்று தொடங்கும் பாடலின் இரண்டாம் பாடல். 

பறையபி நவைசிவை சாம்ப வீயுமை 
யகிலமு மருளரு ளேய்ந்த கோமளி
பயிரவி திரிபுரை யாய்ந்த நூல்மறை - சதகோடி

பகவதி யிருசுட ரேந்து காரணி  
மலைமகள் கவுரிவி தார்ந்த மோகினி
படர்சடை யவனிட நீங்கு றாதவள் - தரு கோவே  



பாடல் 756  - திருக்கூடலையாற்றூர்   
வாட்டியெனைச் சூழ்ந்தவினை  - என்று தொடங்கும் பாடலின் இரண்டாம் பாகம். 

வேற்றுருவிர் போந்துமது ராபுரியி லாடிவகை 
யாற்றின்மணற் றாங்குமழு வாளியென தாதைபுர
மெட்டைஎரித் தாண்டசிவ லோகன்விடை ஏறியிட - முங்கோளாயி

கோட்டுமுலைத் தாங்குமிழை யானஇடை கோடிமதி
தோற்றமேனப் போந்தஅழ கானசிவ காமிவிறல்   
கூற்றுவனைக் காய்ந்தஅபி ராமிமன தாரஅருள் - கந்தவேளே 
                      

பாடல் 759  - யாழ்ப்பானாயன்பட்டினம்   
பூத்தார் சூடுங்   - என்று தொடங்கும் பாடலின் இரண்டாம் பாகம். 

ஆத்தாள் மால்தங் கைச்சிக னிகையுமை 
கூத்தா டானந் தச்சிவை திரிபுரை   
யாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி - புவநேசை

ஆக்கா யாவும் பற்றியே திரிபுர 
நோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை 
யாட்டா லீசன் பக்கத் துறைபவள் - பெறுசெயே   

பாடல் 761  - ஸ்ரீமுஷ்டம் 
சரம்வெற் றிகைய     - என்று தொடங்கும் பாடலின் இரண்டாம் பாகம். 

போருவெற் றிக்கழை வார்சிலை யானுட
லெரிபட் டுச்ச்ரு காய்விழ வேநகை
புகுவித் தப்பிறை வாழ்சடை யானிட - மொருமாது 

புகழ்சத் திச்சிலி காவண மீதுறை
சிவபத் திப்பர மேஸ்வரி யாள்திரி
புவனத் தைப்பரி வாய்முத லீனுமை - யருள்பாலா       


Comments