navaraathiri 9th song
பாடல் 894 - குறட்டி
நீரிழிவு குட்டமீளை - என்று தொடங்கும் பாடலின் இரண்டாம் பாகம்.
நாரணி யறத்தி நாரி ஆறுச மயத்தி பூத
நாயக ரிடத்து காமி - மகமாயி
நாடக நடத்தி கோல நீலவ ருணத்தி வேத
நாயகி யுமைச்சி நீலி - திரிசூலி
வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக
வாணுத லளித்த வீர - மயிலோனே
நாரணி - நாராயணனின் சக்தியை காத்தல் தொழில் செய்பவள்
அறத்தி - அறத்தை நிலை நாட்டும் தர்ம தேவதை
நாரி - சிவனொரு பாகமான நாரி ( சிவ்வமும் சக்தியும் சேர்ந்த ரூபத்தை அர்த்தநாரி என்று கொள்வர்)
அறு சமயத்தி - ஆறு சமயத்தினராலும் போற்றப் படுபவள்
பூத நாயகர் இடத்து காமி - பூத கணங்களின் தலைவரான சிவபெருமானின் இட பாகத்தை மிகவும் விரும்புபவள்
மகமாயி - அண்ட சராசரங்களை ஆட்டுவிக்கின்ற பெரும் மாய சக்தி ஆனவள்
நாடக நடத்தி - சித்து விளையாடல்களும், திருவிளையாடல்களும் புரிபவள்
கோல நீல வருணத்தி - அழகிய நீல வர்ணம் கொண்டவள்
வேத நாயகி - வேதங்களுக்குத் தலைவியானவள்
உமைச்சி - சிவனின் சக்தியான உமை அம்மை
நீலி - கோப உருவான காளி
திரிசூலி - திர்சூலம் தாங்கியவள்
வாரணி - யானை மேல் சமன் புரிபவள் ( தடாதகை பிராட்டியாரின் வாகனம் யானை)
முலைச்சி - படைத்தல் தொழில் செய்பவள் // ஆக்கச் சக்தியாய் இருப்பவள்.
****** இவ்விடத்தில் வார் அணி முலைச்சி - ( மார் கச்சை அணிந்த தனங்களைக் கொண்டவள்) என்றும் கொள்ளலாம்.
ஞான பூரணி - ஞானத்தின் முழு வடிவானவள்
கலைச்சி - கலையரசி
நாக வாள் நுதல் - நாகப் படையையும் வாட் படையையும் ஏந்திய கடவுள்
அளித்த வீர மயிலோனே - அத்தகைய தேவி அளித்த மயிலை வாகனமாகக் கொண்ட வீரனே.
song 894 - Kuratti
second part of the song starting - neerizhivu kutta meelai
naaraNi yaRaththi naari aaRusa mayaththi pootha
naayaka ridaththu kaami ...... makamaayi
naadaka nadaththi kOla neelava ruNaththi vEtha
naayaki yumaicchi neeli ...... thiricooli
vaaraNi mulaicchi nyaana pooraNi kalaicchi naaka
vaaNutha laLiththa veera ...... mayilOnE
meaning :
naaraNi - she is the potecting god of the universe
aRaththi - She is the Goddess who carried out the thirtytwo dharmas* (religious duties)
naari - she is being half of the lord shiva ( the half shiva half shakti form known as Arththa Naari)
aaRu samayaththi - She belongs to the six branches of hinduism
pootha naayakar idaththu kaami - She is concorporate with relish on the left side of Lord ShivA who is the leader of all fiends;
makamaayi - She is the one contraols the universe by being the great illution
naadaka nadaththi - She is the performs the miracles ( sitthu) and she is also plays divine
kOla neela varuNaththi - Her complexion is beautiful and blue
vEtha naayaki - She presides over all the vEdAs
umaicchi - She is Mother UmA
neeli - the vigorous KALi
thirichooli - holding the trident in Her hand
vaaraNi - she is the one rode on the elephant ( when she came down as Thadaathakai she like to rode on the elephant)
mulaicchi - she is the being the creative energy // being the shakthi of Brahma
***** also can be take as Vaar ani Mulaichchi - ( She wears tight-fitting blouse over Her bosom)
nyaana pooraNi - Her Knowledge is absolute and complete
kalaicchi - She is the leader of all arts
naaka vaaL nuthal- she is the one holding snake and sword as her weapon
aLiththa veera mayilOnE - and You are Her Son, Oh valorous One, mounting the peacock!
Comments
Post a Comment