பாரதி பிறந்தநாள் வாழ்த்து பா
தமிழினம் அடிமைப்பட்டு கிடந்த தினங்களில்
அதன் கட்டவிழ்த்து விடுதலை தர
வார்த்தைகளில் வாள்வீச்சு நடத்திய வீரன்
தமிழன்னை பொன்னாரங்கள் போட்டு
அன்ன நடை போட்டு அடிமையாய் நின்ற வேளைகளில்
அவளுக்கு போர்க்கவசமும் போட்டு
பீடுநடை போடவைத்த வேங்கை
பார்ப்பனம் பரங்கியர்க்கு சாமரம் வீசிய வேளையில்
பரங்கியரொடு பார்ப்பனீயத்திர்க்கும் சேர்த்து
பாடை கட்ட பாடிய சிறுத்தை
தேச விடுதலை, தமிழ் பெருமை, இறைமாட்சி
இதுதான் இவனுக்கு முக்கண்
இவனுக்கு சடை வெள்ளை முண்டாசு
சுதேசி பேனா இவனது திரிசூலம்
எழுச்சி கவிதைகள் அவனது ஊழித்தாண்டவம்
கண்ணம்மாவும் செல்லம்மாவும் அவனுக்கு ஆனந்த தாண்டவம்
இந்தச் சிவம் எரித்த திரிபுரங்கள்
பரங்கியம், பார்ப்பனீயம் , அடிமைத்தனம்
இவன் இறந்த பொழுதும் இவனைக் கண்டுகொள்ள வில்லை
இவன் பிறந்ததினத்தையும் மக்கள் சட்டை செய்யவில்லை
காரணம்
இவனுக்கு நடிக்க தெரியாது ;
இறந்தும் இருக்கும் எம் மகாகவிக்கு எனது வீரவணக்கங்கள்

azagu!
ReplyDelete