இந்தியா ஒரு யானை

இந்தியா ஒரு  யானை,
வலிமை மிக்கது... ஆனால்
அது மெதுவாகத்தான் நகரும்;

இந்தியா  ஒரு யானை,
அதனால் அதற்கு அடிக்கடி
" மதம் " பிடிக்கும்...
மதம் பிடித்தால் மனிதம் மறக்கும்;

இந்தியா ஒரு  யானை,
அதன் தந்தம் தமிழகம்...
அதனால் அதன் மதிப்பு
அதற்கு தெரியாது;

இந்தியா ஒரு யானை,
இளமையிலேயே போட்டு விட்டான் வெள்ளையன்,
திறமையாய் ஒரு அடிமை சங்கிலியை...
இன்று வரை அதிலிருந்து மீளத் தெரியவில்லை அதற்கு;

இந்தியா ஒரு யானை,
திறமை இருந்தும் அரசு பாகர்களால்
அது இன்னும் பிச்சை எடுக்கிறது ;

இந்தியா ஒரு யானை,
அது இருந்தாலும் ஆயிரம் பொன்
என்பதை தெரியாமல் இறந்து கொண்டிருக்கிறது...

Comments