ஹனுமான்

யார் இவர்?

ராமயணத்தின் மூன்றாவது ஹீரோ இவர்.  ராமயணத்தின் ட்விஸ்ட்டுக்கு  காரணமும் இவர் . வாயுவுக்கும் அஞ்சனை என்னும் வானர மங்கைக்கும் பிறந்தவர். பெரும் பலசாலி. பெரும் புத்திமான். அமைதியும் அடக்கமும் இவரது கண்கள். சூரியனின் சிஷ்யர். சிரஞ்சீவிகளில் ஒருவர். ருத்ரனின் அம்சம். ராம நாம மகிமையை பறைசாற்றியவர். நித்ய பிரம்மச்சாரி . நியாயவான். பணிபவர்களுக்கு வரும் ஆபத்தை பனியென கரைப்பதை பணியாகக் கொண்டவர். இளகிய மனமும் அழகிய வடிவும் கொண்டவர்.

என்ன செய்வார் ?

ஹனுமான் அணுகுவதற்கு மிகவும் இலகுவானவர். இனிமையானவர். பலரும் சொல்வர், அவரை குடும்பத்தில் வைத்து வழிபடல் ஆகாது என்று. ஐம்பெரும் காப்பியத்தில் மகாபாரதத்தையும் ராமாயணத்தையும் பார்க்கையில் பலரை முன்னின்று காத்தவர். எப்படி நம் குடும்பத்தை கங்கணம் கட்டி கெடுப்பார் எனத் தெரிய வில்லை. சீதை தற்கொலை செய்யும் முன் அவளை சமயோசிதமாகக் காத்தவர். ராம லக்ஷ்மனர்களைக் இந்த்ரஜித்தின் மாய அம்புகளில் இருந்து காத்தவர்; விபீஷணரையும் சுக்ரீவன் முதலானோரிடம் இருந்து காத்தவர். அதற்கப்புறமும் போர் முடிந்து பரதன் தீக்குளிக்காமலும், லவன் குசனை சீதை பெற்றெடுக்கவும் ; அவர்கள்  வளரும் வரை அவர் பாதுக்காப்பகவும் இருந்து வந்தவர் . பாரத காலத்தில் கூட பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் உறுதுணையாய் இருந்தவர். காலங்கள் கடந்து இருக்கும் இவர் நம் காலத்திலும் நமக்கு கூப்பிட்ட குரலுக்கு உதவி செய்வார்..

எப்படி கூப்பிடுவது?





Comments