பாயட்டும் நம் கொம்பு வைத்த சிங்கங்கள் !!!!!!
பேட்டா எனும் வேற்றான் மனையே
நாங்கள் புக வில்லை உங்கள் மனை
வாடி வாசல் எங்கள் வீரர்களுக்கானது
பேடிகள் கூட்டம் உங்களுக்கானது அல்ல
ஏறு தழுவுதல்
மரபுக்கும் மரபணுவுக்கும் ஒரு சேர பெருமை சேர்க்கும் மாண்பு
அதைக் காக்கத்தான் இன்று எடுக்கிறோம் அஹிம்சை எனும் நோன்பு
அவை கொம்புகள் அல்ல
பாரதியின் முறுக்கேறிய மீசை
அவற்றின் பாய்ச்சல் பயத்தால் வந்தது அல்ல
மரபணுவின் சுயத்தால் வந்தது
தமிழ்த் திமிரின் உரத்தால் வந்தது
அதன் முதுகில் உள்ளது திமில் அல்ல
எங்கள் தன்மானத்தை முரசறையும் தவில்
கைது செய்ய வேண்டுமானால்
முதலில்
கண்ணனையும் காளை வாகனனையும் கைது செய்
கல்விக்கூடம் தாண்டி வந்து காளையைக்
காக்கும் காந்தியக் கூட்டத்தை விட்டு விடு
காளைகள்
உங்களுக்கு அது வெறும் கண்காட்சி மிருகம்
எமக்கது நான்குகால் சகோதர வர்க்கம்
அதன் சிறுநீரும் சாணமும் மண்ணை ஆகும் சுவர்க்கம்
எங்கள் மாட்டுக்கு தெரியாதடா ஆண்டான் அடிமை தர்க்கம்
அதற்க்கு தெரிந்ததெல்லாம் எங்கள் வேர்வை நாற்ற புழக்கம்
எங்களுடன் இருக்க்கும் வரைக்கும் உழைக்கும்
இறந்தால் எங்கள் கண்களில் நீர் வரவழைக்கும்
அவற்றால் எங்கள் மண் தாவரங்கள் தழைக்கும்
நான் அடித்தால் கூட அம்மா என்றுதானடா அழைக்கும்
எங்கள் பக்கம் வந்து பார்
பெயரில்லா காளை ஒன்று காட்டு
காட்டினால் கட்டிக்கொள்ள சீலையை காட்டு
மனிதருக்கு காளை எனும்
புனிதப் பெயர் வைக்கும் கூட்டம் நாங்கள்
எம்மினமே,
பாரதி இதை பார்த்தான் எனில்
தமிழ் இனி மெல்லச் சாகும் எனப் பாடியிருக்க மாட்டான்
கம்பன் கண்டான் எனில்
காளைக்கும் காளையர்க்கும் அந்தாதி பாடியிருப்பான்
பூரித்திருக்கிறது உலகத்தில் உப்பு சேர்த்து உண்ட ஒவ்வொரு தமிழுயிரும்
புளங்காகிதம் கொண்டுள்ளது தாய்ப்பால் கொடுத்த ஒவ்வொரு மார்பும்
உங்கள் மௌன வீரத்தால்
திறக்கட்டும் வாடிவாசல்கள் எங்கெங்கும்
பாயட்டும் நம் கொம்பு வைத்த சிங்கங்கள்

Comments
Post a Comment