கிறுக்கல்
நான்
என் தாயின் கருக்குள்
என் தந்தை வரைந்த கிறுக்கல்
என் எண்ணம்
ஆன்மாவின் தேடலில்
என் மனதில் விழுந்த கிறுக்கல்
என் ஆணவம்
என் ஆண்மை திமிரில்
என் அகங்காரம் போடும் கிறுக்கல்
என் அவமானம்
என் ஆணவம் சறுக்கும் போதெல்லாம்
என் மனது உடலில் வெளிப்படுத்தும் கிறுக்கல்
இப்பொழுது எனது கிறுக்கல்கள்
எனது சறுக்கல்களின் அடையாளம்
எனது முறுக்கல்களுக்கு உவமானம்
எனக்கு நான் கொடுத்து கொள்ளும் சன்மானம்

Comments
Post a Comment