என்னத்த பற்றி

ஒரு பக்கம்
குலை குலையா எம்மினத்தை கொன்று போட
குருநாய்கள் கூடி நின்னு கொக்கரிக்க
கூட்டு சேர்ந்து சட்டாம்  பிள்ளைக குறுக்கு சால் ஓட்ட ....
இதுல நான் பேசணுமா?
என்னத்த பற்றி?


காட்ட திருத்தி கழனியாக்கி
மேட்ட திருத்தி வயலாக்கி
வானம் பாத்த பூமியெல்லாம்
வாய்க்கா வெட்டி வளமாக்கி
காட்டாறா பாஞ்ச காவிரியை
கல்லணை கட்டி உரமாக்கி
காலம் பூராவும் காஞ்சி செத்த சனங்களுக்கு
கால் வாசி தண்ணி விட மனமில்லையாம்
இதுல நான் பேசணுமா?
என்னத்த பற்றி?


வள்ளுவனும் வரி வரியா எழுதி வெச்சும்
பாரதியும் பாட்டால பாடி வச்சும்
படி தாண்டுன பொண்ணுங்க இன்னும்
பத்திரமா வந்து சேரலையே
இதுல நான் பேசணுமா ?
என்னத்த பற்றி ?

இருந்தாலும் சொல்லுறன்
என்னத்த பற்றி ...?
கால் காசு இருந்தாலும் - சொந்த
காலால நிக்கணும்
என்னத்த பற்றி தொற்றி நின்னாலும்
உழைச்சதுதான் ஒட்டும் உடம்புல
இல்லாட்டினா போனோம் கூட பாக்காதையா புறம்புலே


Comments