காஞ்சி காமாட்சி

பல்லவர் ஆட்சியில் உச்சியில் இருந்த காஞ்சி 
அதன் தற்போதைய நிலைமை கொஞ்சம் அம்மாஞ்சி 

ஆனாலும் அதை ஆள்பவள் காமாட்சி 
அதனால்  கொஞ்சமும் குறையவில்லை அதன் மாட்சி 
குறைவிலாமல் விளங்குகிறது அவள் அரசாட்சி 
அதற்கு குறையமால் அங்கு கூடும்  கூட்டமே சாட்சி 

ஒரு காலத்தில் கட்டுகடங்காமல் இருந்தது அவள் கோபம் 
காரணம் - காரணமே இல்லாமல் நரபலி கொடுக்கும் 
அரக்க குணம் கொண்ட மூடர்கள் செய்த பாபம் 
அந்த மண்டூகங்களால் எம் அன்னைக்கு  ஏற்பட்ட சாபம் 
கோர மூர்த்தமாகவே மாறியிருந்தது அவள் ரூபம் 

விடியலைத் தேடிக் காத்திருந்தது  வானம் - அப்பொழுது 
அப்பக்கம் வந்தது ஒரு காவி கட்டிய ஞானம் 
அத்வைதமும் அறுசமயமுமே அதற்க்கு பிரதானம் 
அமைதியாய் இருந்தாலும் அனைத்து தெரிந்த அவதானம் 
எதுவாயினும் அந்த ஞானத்தீ கடைபிடிக்கும் சாவதானம் 

ஆதிசங்கரர் என்பதவர் கொண்ட நாமம் 
அனுதினம் வளர்த்தார் ஞானம்  எனும் ஓமம்
இளமையிலேயே தனக்குள் ஒழித்தார் காமம் 
அவருக்கு அம்பிகையின் மேல் அப்படி ஒரு பிரேமம் 

அந்தக் காலடியின் ஞானப்பட்சி 
 வந்து சேர்ந்தது கச்சி 
கண்டது காமாட்சியின் கண்ணில் உக்ரத்தின் உச்சி 
அவள் முன் அவர் கண்டது நிணம் ஒழுகும் இறைச்சி 
அருவருப்பான அக்கோலத்தால் வந்தது அவர்க்கு அயர்ச்சி 

ஆலமுண்ட கண்டனின் ஓரகத்தி 
அவளண்டை வெளிப்படும் சக்தி 
அதை அடக்கி ஆக்கினார் மூக்குத்தி - அவரது 
சாமகானத்தால் தனிந்ததவள் சினத்தீ 

பெண்ணுரு கொண்ட அந்த முப்பத்திரண்டு அறத்தை 
அமைதிபடுத்த அவள்முன் ஸ்தாபித்தார் ஸ்ரீசக்கரத்தை 
அவள் உக்ரம் வெளியே செல்லாது வைத்தார் ஐங்கரத்தை 
அறியாமாந்தர்கள் மேல் அவருக்கு  சிரத்தை 

அன்று அமைதியாய் அருள அமர்ந்தவள் 
இன்றும் அளவிலா அருளைப் பொழிகிறாள் 
அன்பர்களை அளவளாவி அனுப்புகிறாள் 
அற்பங்களைக் கூட அளகாபுரியர்கள் ஆக்குகிறாள் 

அழுத கண்ணோடும் தொழுத கையோடும் 
பழுது வேலைகள் நடந்து கொண்டிருக்கும் 
காமகோட்டத்தை விட்டு கிளம்பினேன் நீங்கி 
காமகோடி பீடம் வாழும் கதிரவனை நோக்கி 




Comments