காஞ்சி மடம்
ஜகத்குரு தாபித்த குரு பாரம்பரியம்
கட்டுகோப்பும் சுய ஒழுக்கமும் அதன் தாத்பர்யம்
காலம் கடந்து அது நிற்பதுதான் ஆச்சர்யம் - காரணம்
அப்பீடாதிபதிகளிடம் கிஞ்சித்தும் இல்லை மதம் மாச்சர்யம்
பால மகா புண்ணியர்களை தாங்கிய மடம்
வழியறியா உயிர்களுக்கு வழிகாட்டும் போக்கிடம்
கோடிகோடி சொத்திருப்பினும் எளிமைக்கே முதலிடம்
மடம் எனும் தேரைக் கட்டி இழுப்பது ஒழுக்கம் எனும் வடம்
சென்ற நேரம் மதியம் ஆனது
வரவேற்றவரின் உபசரிப்பில் மனம் மகிழ்ந்து போனது
மடத்தின் அதிர்வலையே ஒரு பெரும் மகத்தானது
அச்சிறப்பு காமகோடி பீடத்துக்கே உரித்தானது
சிறிய மடாதிபதி ஸ்படிக லிங்க பூஜையிலிருந்தார்
மேடம் முழுக்க அவாள்குழாமே குழுமியிருந்தார்
ஏகாதசி காரணமாய் மாடதிபதி மௌன விரதமிருந்தார்
இவ்வெளிமை கொட்டொழுங்கில் தான் அவர் மடத்தாருள் சிறந்தார்
முடிந்ததும் சென்று கண்டேன் ஜெயேந்திரரை - தற்போது
மடத்தின் தலைமையை தாங்கி இருக்கும் முனீந்திரரை
ஆசிர்வதித்து தந்தார் குங்குமத்தோடு கல்கண்டு
அப்போதவர் நிலைமை வண்டுகள் சுற்றிடும் பூச்செண்டு
பிறகு நேரே நான் நடந்து சென்ற இடம்
காஞ்சிப்பெரியவரின் பிருந்தாவன இருப்பிடம்
ஞானச்சூரியன் அத்தமித்த கொள்ளிடம் - இன்றும்
அவர் அதிர்வலைகள் அலையும் நல்லிடம்
எனை ஆக்கிய குருநாதரின் மானசீக குரு
எளிமை, ஆன்மிகம், புரட்சி இம்மொன்றின் மொத்த உரு
இருந்த இடத்திலேயே இரந்து ஆளும் கற்பகத் தரு
பூதவுடலை விடுத்த பின்னும் உயிர்களுக்கு ஆகிறது எரு
மனமாரத் தெண்டனிட்டேன் காஞ்சிப் பெரியவரை
கோடானுகோடி உயிர்களின் உன்னத வணக்கத்துக்கு உரியவரை
அகத்தியர் போல் ஞானத்தால் உயர்ந்து உருவத்தால் சிறியவரை
ஞானிகளை பொருத்தவரை அவர் ஞானியர்க்கெல்லாம் பெரிய வரை
அஞ்ஞானம் , அப்பழுக்கு என உயிர்களைத் தடுக்கும் பெருஞ்சுவரை
அழித்தொழித்து உயிர்களைக் கடைதேற்றிய முனிபுங்கவரை
பரமகுருவே !
ஜகத்குருவின் மறு உருவே !
இங்குனை அடிபணிகிறது மும்மலங்களால் ஆன கருவே !
எனை அடக்கி ஆண்டருள வேண்டும் திருவே !
இம்மையும் மறுமையும் அருளும் பெருவே
காதில் விழுந்தது போலும் இந்த நாயனின் கூக்குரல்
அப்போதில் அங்கு எனை கூப்பிட்டது ஒரு குரல்
திரும்பி பார்த்தேன் ; கூப்பிட்டவர் முகத்தில் மூரல்
உள்ளே வரச் சொல்லி அழைத்தது அந்த ஏந்தல்
சென்றதும் நான் கண்குளிரக் கண்டது - என்
நெஞ்சோடு சேர்த்து வாயும் விக்கித்து கொண்டது
என் கண்களில் மழைத்தூறல் மூண்டது - மனத்தை
மகாபெரியவரின் பேரருள் ஆட்கொண்டது
கிட்டியது ஒரு பெரும் கொடுப்பினை - பெரியவாளின்
பாதக்குறடுகளுக்கு பூசனை செய்யும் கொடுப்பினை
என் தவறுகளைக் கழுவக் கிடைத்த படிப்பினை - என்
ஆன்மீகத்தின் மேல் நான் கொண்ட பிடிப்பினை
மேலும் உறுதியாக்கினார் அந்த வானவர்க்கும் மேலான உயற்றினை
பூஜை ஆனது கொஞ்ச நேரத்தில் பூர்த்தி - அவர்கள்
செய்து முடித்த விதமும் மிகமிக நேர்த்தி - காட்டினர்
பாதக்குரடுக்கும் பிருந்தாவனத்துக்கும் தீபாராத்தி
அவ்வொளியில் எம் பெரியவாழ விட்டுனுவுக்கு சேர்த்தி
மண்ணிடை மறைந்தாலும் மறையாது அவரது கீர்த்தி
மானசீகத்திலும் அருள் புரியும் பெரும் வித்யார்த்தி

Comments
Post a Comment