கச்சி ஏகம்பர்


ஏகம்பத்துறை எந்தாய் போற்றி - பாகம்
பெண்ணுரு ஆனாய் போற்றி  - எனும்
வாசகத்தை மூலைக்கு மூலை வைத்திருந்தனர் ஏற்றி
வெயிலோ வாட்டியதெங்களை தலையில் அனலை ஊற்றி

பல்லவர் காலப் பெருங்கோயில் இந்த ஏகம்பம்
நாத்திகர் மனத்தையும் கரைத்திடும் பூகம்பம்
அடியவர் மனத்தினில் ஏற்றிடும் பூக்கம்பம் - பரமனின்
புகழுக்கு ஏகம்பம் இன்னொரு கரவலம்பம்

குனிந்து பணிந்து சென்றேன் கோயிலுக்குள்
அர்ச்சனை பையைத் தாங்கி இருந்தது என் அக்குள்
சிற்பக்கலையின் சிறப்பால் ஏற்பட்டது மலைப்பு எனக்குள்
எம்பெருமான் எப்படி வடித்திருக்கிறான் இப்படி தனக்குள்

உள்ளே சென்று முதலில் நாங்கள் பணிந்தோம் நந்தியை
அரனை அனவரதமும் அரவணத்து வைத்திருக்கும் புந்தியை
அவன்தான் அரனிடம் சேர்க்க வேண்டும் நமது வேண்டுதல் எனும் தந்தியை
அவன் அனுமதி இல்லையேல் காற்றுகூட அணுக முடியாது முந்திக்கும் முந்தியை

கொடிமரம் தாண்டி உள்சென்று வணங்கினோம் அரனை
மணலாலேயே தன்னை ஆக்கி அமர்ந்திருக்கும் பரனை
மனமார கோளறு பதிகம் பட்டித் துதித்தேன் மான் மழுவந்திய கரனை
அண்டங்களை படைத்தாண்டு கொண்டு அமைதியாய் அமர்ந்திருக்கும் திகம்பரனை


மார்கண்டேயனுக்காக மறலியை உதைத்த தனல் - இங்கு
மனைவிக்காக தம்மை ஆக்கிக் கொண்டது மணல்
பல்லாயிரம் ஆண்டுகள் தாண்டியும் குறையவில்லை அதன் அருட்புனல்
எண்ணெய் காப்பு கொண்டு அமர்ந்திருந்தது நீறு பூசிய அனல்

பார்க்க பார்க்க பூத்துக் கொண்டே இருந்தது பூரிப்பு
மனம் மலைத்து போய் நடத்தியது மௌனத்தின் சாதிப்பு
ஆங்கவன் காட்சியைக் கண்ணாரக் கண்டதன் பாதிப்பு
எனக்குள் அது ஏற்றியது புத்துனர்ச்சியின் தாது உப்பு

புலித்தோல் அணிந்து சுடலையில் நடமாடும் பெருஞ்சிவத்தை, - கைப்பற்ற
அகிலத்தின் அன்னை இங்குதான் இயற்றினாள் தன் அருந்தவத்தை
இங்குள்ள மாமரத்தின் கீழ்தான் அடக்கினாள் தனது ஐந்தவத்தை
ஒரு பொருட்டாகவே கருதவில்லை சுற்றியுள்ள ஆளரவத்தை

அதற்க்கு சாட்சியாய் அவளமர்ந்த மாமரம்  - ஆண்டுகள்
தாண்டியும் அமைதியாய் நிற்கிறது அந்த தாவரம்
அம்மரம் அதனாலேயே பெற்றது சாகாவரம் - வணங்கியதும்
நான் தாண்டி குனிந்து சென்றது ஒரு தாழ்வாரம்

முழுக்கோயிலையும் கும்பிட்டபின்
வெளிவந்த இடத்தில் வெக்காளி - அவள் கட்டியிருந்த
சேலையின் நிறமோ பழுத்த தக்காளி
அவ்வெக்காளி காமாட்சியின் தவத்திற்கு துணையிருந்த சேக்காளி
கொடுத்ததை கொடுத்த வண்ணம் நிறைவேற்றும் வாக்காளி


முடித்தது கோயில்  உலா சுற்று
முடித்தேன் திருக்குளத்தில்  சுற்று
முடித்ததும் கிளம்பினோம் முருகனை நோக்கி; - சூரை
முடித்தவன் வேலைப் பிடித்தவன் திருத்தலம் நோக்கி








Comments