யாத்திரை முதல் நாள் ...2

விமானம் விட்டிறங்கி சுங்கச் சமாசாரங்களை முடித்த பின் விமான நிலையத்தின் வெளியே வந்த போது நண்பர் சரவணனும் வேல்ராஜும் நின்று கொண்டு இருந்தனர். அவர்களின் நண்பர் ஒருவரும் என்னைப் பார்க்கும் ஆவலில் அவர்களோடு வந்திருந்தார். நேரே வந்து வண்டியில் அமர்ந்தோம் ஒரு சசிறிது நேர உரையாடலுக்கு பின் வண்டி தூத்துக்குடியை நோக்கி புறப்பட்டது.

அப்பொழுது கூட வந்த நபர் ஒரு இடத்தில் நிறுத்தத் சொன்னார்.. நாங்கள் அனைவரும் நெட்டி முறிக்கவும் , சிறுநீர் கழிக்கவும் இறங்கினோம். நான் அப்படையே நடந்து வந்து ஒரு தூண் மீது சாய்ந்து நின்றேன். திரும்பியபோது ஒரு இளைஞன் கற்பூராதி தட்டோடு வந்து என்னிடம் நின்றான். ஒன்றும் விளங்கவில்லை என்றாலும் திருநீறை வாங்கி கொண்டு நான் ஆவணி பின் தொடர , நண்பர் வேல்ராஜ் என்னை பின் தொடர, ஒரு கோவிலுக்குள் சென்றோம்.

அது ..
மாயாண்டி கருப்பசாமி கோயில். அன்று தான் கெடா வெட்டு பூஜை முடிந்திருந்தது. அன்று காலி என் தம்பி மூலம் கருப்பர் என்னிடம் கூறியதை நினைத்தேன். மண்டியிட்டு நன்றி சொல்லினேன்.


செல்லும் வழியில் ஒரு கடையில் இரவு உணவை முடித்த பின் நேரே தூத்துக்குடி சென்றடைந்தோம் . நேரம் ஏறக்குறைய இந்திய மணி 11.45 இரவு. தங்கும் விடுதியில் சென்று பொத்தென்று மெத்தையில் விழுந்தேன். அவ்வளவு களைப்பு. சிறிது நேரம் கடந்த 2 மாதங்களில் என் வாழ்வில் நடந்த கூத்துகளை நினைத்தேன். என்னை நினைத்து நானே சிரித்தேன். எம்பெருமான் என்னை எப்படி எல்லாம் நடத்திக் கொண்டு வந்து சேர்த்து இருக்கிறான் அன்று எண்ணி உவந்தேன். இரவு தூக்கம் உடனே வரவில்லை. பழைய யாத்திரைகளை பற்றி அசைப்போட்டும், சில பசுமைகளை எடைபோட்டும் மெல்ல உறங்கி போனேன்.

காலை மணி 7.00 மணிக்கு நண்பர் சரவணன் கைப்பேசி மூலம் எழுப்பினார். குளித்து காலை கடன்கள் கழித்து எம்பெருமானை பார்க்க தயாரானேன்.

Comments