நவராத்திரி நான்காம் பாடல்
நவராத்திரி நான்காம் பாடல்
பாடல் 322 . காஞ்சிபுரம்
தலைவலை யத்துத் - என்று தொடங்கும் பாடலின் இரண்டாம் பாகம்
குலசயி லத்துப் பிறந்த பெண்கொடி
யுலகடை யப்பெற் றவுந்தி அந்தணி
குறைவற முப்பத் திரண்ட றம்புரி - கின்றபேதை
குணதரி சக்ரப் பிரசண்ட சங்கரி
கணபண ரத்னப் புயங்க கங்கணி
குவடுகு னித்துப் புரஞ்சு டுஞ்சின - வஞ்சிநீலி
கலபவி சித்ரச் சிகண்டி சுந்தரி
கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி
கருணைவி ழிக்கற் பகந்தி கம்பரி - எங்களாயி
கருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகை
சுருதிது திக்கப் படுந்த்ரி யம்பகி
கவுரிதி ருக்கொட் டமர்ந்த இந்திரர் - தம்பிரானே
காஞ்சிபுரம் திருக்கொட்டம் என்று அருணை பெருமானால் அழைக்கப் படுகிறது. அங்குறையும் காமாட்சித் தாயை அவர் சிவனின் பெண்ணுருவாகவே பார்க்கிறார். அம்பிகையே அப்பனில் சரி பாதி அல்லவா?
இப்பாடலில் அதற்கு சாட்சியும் கூறுகிறார்.
குல சயிலத்து பிறந்த பெண் கொடி - இமயத்தரசனுக்குப் பிறந்த கொடி போன்ற இடையுடைய பேரழகி
உலகு அடையப் பெற்ற உந்தி அந்தணி - உலகங்களை நன்முறையில் காத்து ஈன்றெடுத்த மறையவள் ( அந்தணி - பெண்பால்; அந்தணன் - மறையவன் ; சிவனுக்கு மறையவன் என்றொரு பெயருமுண்டு ; அதன் பொருள் வேதங்களானவன், வேதங்கள் ஓதுபவன் ; பசு பாசங்களை மறைத்தவன், மறைந்து நின்றருளுபவன் )
குறைவு அற முப்பது இரண்டு அறம் புரிகின்ற பேதை - காஞ்சியம்மனுக்கு பாலாம்பிகை என்றொரு பெயருமுண்டு ( சிறுமி வடிவானவள்); பேதை என்றால் 5 வயது முதல் 7 வயது வரை ; சிறுமி வடிவிலுள்ள காஞ்சியம்மன் முப்பத்திரண்டு அறங்களையும் வழுவாது குறையாது செய்து மக்களைக் காத்து வருகிறாள்.
குணதரி - நல்ல மங்கள குணமுடையவள்
சக்ரப் பிரசண்ட சங்கரி - மந்திர, தந்திர, யந்திர சக்ரங்களில் வீர்யத்துடன் வீற்றிருக்கும் தேவி; சங்கரன் மனைவி
கணபண ரத்னப் புயங்க கங்கணி - மாணிக்க ரத்தினமும், படமெடுக்கும் வீரியமும் கொண்ட நாகங்களை தனது கரங்களில் வலையல்களாகச் சூடுபவள்
குவடு குனித்துப் புரம் சுடும் சின வஞ்சி - மேருவை வில்லை வளைத்து திரிபுரத்துக்கு எதிராகப் போரிடக் கிளம்பி புன்னகையினாலே சுட்டெரித்த கோபக்கார மங்கை
நீலி - துர்கை
கலப விசித்ரச் சிகண்டி - அழகிய நடமிடும் மயிலைப் போன்றவள்
சுந்தரி - பேரழகி
கடிய விடத்தைப் பொதிந்த கந்தரி - கண்டத்தில் மிகவும் கொடிய ஆலகால விஷத்தை அடக்கிக் கொண்டிருப்பவள்
கருணை விழி கற்பகம் - கருணை கூர்ந்து தன் மக்களுக்கு கடைக்கண் பார்வையால் அனைத்தையும் அருளுவதில் கற்பக விருட்சம் போன்றவள்
திகம்பரி - மாயைகளைக் களைந்தவள் ( திகம்பரம் என்றால் நிர்வாணம் என்றும் நிர்மலம் என்றும் பொருள் படும்; திகம்பரன் : சிவநாமம் )
எங்கள் ஆயி - எங்களுக்கு தாயானவள்
கருதிய பத்தர்க்கு இரங்கும் அம்பிகை - நினைவில் இருத்தும் அன்பர்களுக்கு பரிந்து அருள் பல வழங்கும் அம்பிகை
சுருதி துதிக்கப் படும் த்ரயம்பகி - வேதங்களால் புகழ்ந்து ஏற்றப் படும் முக்கண் கொண்ட தேவி .
கவுரி - அழகான வெளிர் நிறத்தவள்
திருக்கொட்டமர்ந்த இந்திரர் தம்பிரானே - அத்தகையவள் ஆட்சி செய்யும் கோட்டையில் அமர்ந்து இந்திரர் முதலானோர்க்கும் அருள் புரிந்து பரிபாலிக்கும் முருகப் பெருமானே....
kulasayi laththup piRantha peNkodi yulakadai yappeR Ravunthi yanthaNi
kuRaivaRa muppath thiraNda Rampuri ...... kinRapEthai
kuNathari chakrap prasaNda sankari
kaNapaNa rathnap puyanga kangaNi
kuvaduku niththup puranchu dunchina ...... vanjineeli
kalapavi chithrac chikaNdi sunthari
kadiyavi daththaip pothintha kanthari
karuNaivi zhikkaR pakanthi kampari ...... yengaLAyi
karuthiya paththark kirangku mampikai
suruthithu thikkap padunthri yampaki
kavurithi rukkot tamarntha inthirar ...... thambirAnE.
......... Meaning .........
kulasayilaththup piRantha peNkodi: She is the beautiful and well figured daughter born to the great Mountain king, HimavAn;
ulaku adaiyap petRa unthi anthaNi: In Her womb, the entire universe was conceived; ( anthani - she is being the core meaning of vethas)
kuRaivaRa muppaththirandu aRam purikindra pEthai: She is the young lady ( balambika) carrying out the thirtytwo religious duties* without any flaw;
kuNathari: She is the repository of all virtues;
chakrap prasaNda sankari: She is Sankari reigning with valour on all the chakrAs and yanthrAs (Seats of Goddess Shakthi @ shree Chakra);
kaNapaNa rathnap puyanga kangaNi: her bangles consist of multi-hooded serpents, holding precious gems;
kuvadukuniththup puranchudun china vanji: looking like a beautiful and calm, but with intense rage, She bent Mount Meru as a bow to burn down the three evil ravaging cities, Thiripuram**;
neeli: she is the dhurga
kalapavi chithrac chikaNdi: She has the likeness of a peacock with beautiful feathers;
sunthari kadiyavidaththaip pothintha kanthari: She is the most beautiful; In Her neck She holds the most virulent poison**;
karuNaivizhik kaRpakam: She has eyes showering compassion; She is like the wish-yielding celestial tree, KaRpagam;
thikampari : She wears all the eight directions as clothing ;
yengaL aayi: She is our Mother;
karuthiya paththarkku irangkum ampikai: She is the Goddess showering grace upon all the devotees who think about Her;
suruthi thuthikkap padum thriyampaki: She has three eyes (namely, the sun, the moon and fire)** worshipped by all the four vedhas;
kavuri: and She is Gowri with fai complexion
thirukkottam amarntha:KamAkshi, and in Her sacred temple at KAnchipuram, You are seated.
inthirar thambirAnE.: Oh Lord, You are the Great One worshipped by all the Heads of the Celestials!
* Thirty two religious duties are listed in Periya Puraanam as follows:
Road-laying; Food for teachers; Food for all the six kinds of religious people; Feeding the cows; Feeding the prisoners; Alms; Distribution of eatables; Feeding the orphans; Obstetrics; Orphanage; Feeding milk to babies; Cremation of destitute corpses; Clothing the orphans; Whitewashing old houses; Offering medicines; Washing others' clothes; Barber's work; Providing glasses for visually-impaired; Piercing ears and providing studs; Eyedrops for medication; Providing hair oil and hair cream; Fomentation for relief; Protecting others from perils; Free distribution of potable water; Provision of free accommodation; Provision of bathing facility; Rearing shady groves; Providing sandals and shoes; Feeding animals; Ploughing the field; Providing security guard; and Conducting marriages.
** All these acts or aspects, usually attributed to Lord SivA, equally apply to Mother PArvathi also as She is the left-half of the Lord.
.
Comments
Post a Comment