navarathri 5th song


பாடல் 384 - திருவருணை
அமுத மூறுசோ - எனத் தொடங்கும் பாடலின் இரண்டாம் பாகம்.    

குமரி காளிவ ராகிம கேசுரி
கவுரி மோடிசு ராரிணி ராபரி 
கொடிய சூலிசு தாரணி யாமளி  - மகமாயி

குறளு ரூபமு ராரிச கோதரி
யுலக தாரியு தாரிப ராபரி 
குருபா ராரிவி காரின மோகரி - அபிராமி 

சமர   நீலிபு ராரித நாயகி
மலைகு மாரிக  பாலிந னாரணி 
சலில மாரிசி வாயம னோகரி -   பரையோகி    

சவுரி வீரிமு நீர்விட போஜனி
திகிரி மேவுகை யாளிசே யாளொரு  
சகல வேதமு மாயின தாயுமை.... யருள்பாலா 





குமரி - என்றும் இளமை மாறாதவள்  
காளி - கரிய நிறத்தவள்  
வராகி - வராக முகம் கொண்டவள் // வராகமூர்த்தியின் சக்தியானவள்  
மகேசுரி  - மகேஸ்வரனின் சக்தியானவள்   
கவுரி - பால் போன்ற வெளிர்  நிறத்தவள்  
மோடி - கடலானவள்  
சுராரி - தேவர்களை கண் போலக் காப்பவள்  
நிராபரி  - பொய்மை இல்லாதவள் 
கொடிய சூலி -  மிகவும் பயங்கரமானதும் கொடியதுமான சூலத்தை ஏந்தியிருப்பவள்  
சுடாரணி - ஒளி மிகுந்த சுடர்களை சூடியிருப்பவள் 
யாமளி  - பச்சை நிறத்தவள் 
மகமாயி - மாயா சொரூபியானவள் 
குறள் உரூப முராரி சகோதரி - வாமன அவதாரமெடுத்த நாராயணரின் தங்கையானவள்   
உலகதாரி - உலகங்களைச் தரித்து சுமப்பவள்.
உதாரி -  தயாள குணம் உடையவள் 
பராபரி   - முதன்மைக்கும் முதன்மையானவள் 
குருபராரி - குரு முதல்வனான சிவனுக்குக் கண் போன்றவள்   
விகாரி - வித்தியாசமானவள்  
நமோகரி  - துதிக்கப் படுபவள்   
அபிராமி - பிரம்மத்தினும் மேலானவள் 
சமர  நீலி - பெரும் போர் செய்ய வல்ல துர்கையானவள்  
புராரி தன் நாயகி  - திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளின் நாயகி 
மலைகுமாரி - மலையரசனின் மகள் 
கபாலி - கையில் வெட்டப் பட்ட தலையை ஏந்தியவள்   
நன்  நாரணி - மிகவும் நல்ல நாராயணி ஆனவள் // திருமாலின் சக்தி ஆனவள் 
சலில மாரி - பக்தர் துயர் தீர்க்க பெய்யும் மழையானவள்    
சிவாய மனோகரி  - சிவனால்  மிகவும் விரும்பப் பட்டும் அவரை வசீகரிப்பவளாகவும் இருப்பவள் 
பரை - பராசக்தி  
யோகி  - யோக நிலையில் இருப்பவள் // யோக சக்தியாய் இருப்பவள் 
சவுரி - வலிமை உள்ளவள் 
வீரி - வீரியம் மிக்கவள்  
முநீர் விட போஜனி  - பாற்கடலில் எழுந்த விஷத்தை உண்டவள் 
திகிரி மேவு கையாளி -  கையில் சக்கரம் ஏந்தியவள் 
செயாள் - செய தேவி : விஜய லக்ஷ்மி ஆனவள் 
ஒரு சகல வேதமும் ஆயின தாய் - வேதமாகவும், வேதத்தின் உட்பொருளாகவும், பிரணவமாகவும்   
உமை - மலையவள்  
அருள் பாலா - அருளிய சிறு முருகா... 
 kumari kALi varAhi mahEsuri
gavuri mOdi surAri nirApari
kodiya sUli sudAraNi yAmaLi ...... mahamAyi


kuRaLu rUpa murAri sahOdhari
ulaga dhAri udhAri parApari
guruparAri vihAri namOhari ...... abirAmi


samara neeli purAritha nAyaki
malai kumAri kapAlina nAraNi
salila mAri sivAya manOhari ...... paraiyOgi


savuri veeri muneer vida bOjani
thigiri mEvu kaiyALi seyAL oru
sakala vEdhamum Ayina thAyumai ...... aruLbAlA




kumari - she is ever young
kaaLi - known as kaali due to her dark complexion
varaaki - she have a avathar with the wild boar's face; sakthi of the lord Varahar.
mahEsuri- She is the Great Goddess;
gavuri - she is ever fair like milk.
mOdi - durga
suraari - being the eyes for the olympians.
niraapari- she is without any falsehood
kodiya sooli - She holds a powerful trident in Her hand
sudaaraNi- she wears the brilliant moon as ornamanet // She is in the form of an effulgence;
yaamaLai - She has the complexion of emerald green
mahamaayi - She is the Greatest Delusion;
kuRaL uroopa muraari salOdhari -  She is the sister of the Lord Vishnu who took the dwarf (VAmana) form;
ulagadhaari - She is the mother who conceives the universe and protects it
udhaari - She is compassionate
paraapari- She is primordial
guruparaari - She is like the third eye of the Great Master, Lord SivA
vihaari - She assumes diverse forms
namOhari - She is worshipped by all
abiraami- she is above the parabrahmam
samara neeli - She is Goddess Durga, a capable warrior
purari than naayaki- She is the Consort of Lord SivA who burnt down Thiripuram;
malaikumaari - She is the daughter of the mountain king Himavan
kapaali - She holds the skull in Her hand
nan naaraNi- She is the virtuous sister of Narayana known as Narayani // being the sakthi of narayani
salila maari - She is like the showering cloud upon the souls needing her
sivaaya manOhari - he is the most desirable one connected with Lord Shiva and mesmerising him.
parai - She is ParA Sakthi (Supreme Energy)
yOgi- She is a Yogi // being the energy of yoga
savuri - She is extremely strong;
veeri - She is valorous;
muneer vida bOjani - She imbibed the evil poison AlakAlam that emerged from the milky ocean;
thigiri mEvu kaiyaaLi - She holds the chakra in Her hand;
seyaaL- She is vijaya Lakshmi // the one gives victory
oru sakala vEdhamum aayina thaay - She is the unique combination and core essential of all the VEdAs;
umai - She is Mother UmAdEvi (PArvathi).
aruLbaalaa: You are the son delivered by Her! 

Comments