மழலை

ஆயிரம் பேரைச் சுற்றமாய் கொண்டாலும் 
அள்ளி அணைக்க ஒரு குழந்தை இல்லையேல் 
அவனும் அநாதை தான் 

பணம் பலகோடி சேர்த்து 
இடம் பலகோடி வாங்கி 
வண்டி வாகனங்களோ டிருந்தாலும் 
மண்டிபோட்டாவாறு தத்தி தவழ்ந்து 
முண்டியபடி அணைக்க வரும் மழலை இல்லையேல் 
அவனும் பிச்சைக்காரன் தான் 

ஐவகை வாத்தியங்களை ஐயமறக் கற்றுணர்ந்து 
மெய்புளகம் ஆகும் வரை தலையாட்டி மீட்டிசைத்து 
பொய்த்திட்ட வானத்தையும் மழை பெய்ய வைத்தாலும் 
கைப்பிள்ளை கொள்ளாத வித்துவானும் மூடன்தான் 

குழந்தை -
பேசத்தேரியாத இறைவன் 
புன்னகைக்கும் பொற்சிலை 
நாம் போட்ட விதையில் நமக்கு முளைத்த நிம்மதி 
நம் தோள் மார்பு முதுகுகளில் மாறி மாறி விளையாடும் இறை சந்நிதி 

நிலவை இழுத்து காட்டில் காலில் காட்டும் திறமை அதற்குண்டு 
நாய் பூனை குருவிகளிடம் பேசி புரிந்து கொள்ளும் புலமை அதற்க்கு உண்டு 
சிவநடனத்தை விஞ்சும் நடையும் கலைவாணியின் இசையை மிஞ்சும் சிரிப்பும் அதற்கு உண்டு 
அதன் மொழி இயல் இசை நாடகமும் கலந்த நான்காம் தமிழ் 

குழந்தை உள்ளவன்

ஏழையானால்,
தான் பெற்ற மகவை " என் தங்கமே " என கொஞ்சி பணக்காரன் ஆகிறான் 
அனாதையானால் ,
தன் செல்லக் பிள்ளையின் மழலை அழைப்பில் சொர்கத்துக்கே சொந்தக்காரன் ஆகிறான் 
மூடன் ஆனால் , எந்த வாத்தியமும் தராத இன்பத்தை தன் குழவியின் கெக்களிப்பின் கண்டு கொக்கரிக்கிறான் 

இறைவன் கொடுத்த வரம் குழந்தைகள் அல்ல 
குழந்தைகளை கொடுக்க வரமாய் தரப்பட்டவன் இறைவன் 
மனிதனை இறைவனாய் மாற்றும் வரங்கள் குழந்தைகள் 


Comments

Post a Comment