சிவபரம்
நமசிவயன் தாள் போற்றி
நர்த்தனத்தால் படைப்புச் செய்து
மர்த்தனத்தை சிரிப்பால் செய்யும்
சிற்றம்பலம் வீற்றிருக்கின்ற சிவமே
வற்றாத அருட்புனல் நின் திறமே- நீயி
யற்றாத தொழிலில்லை பரமே
மர்த்தனத்தை சிரிப்பால் செய்யும்
சிற்றம்பலம் வீற்றிருக்கின்ற சிவமே
வற்றாத அருட்புனல் நின் திறமே- நீயி
யற்றாத தொழிலில்லை பரமே
நரிகளை ஓரிரவு பரியாக்கிய ராவுத்தன்
மறலியை மிதித்து சிறுவனைக் காத்தன்
மறலியை மிதித்து சிறுவனைக் காத்தன்
சிறுதொண்டரை சோதித்த பைரவ எத்தன்
வன்தொண்டருக்கு இவன் பிறைசூடிய பித்தன்
யட்சகனை மிதித்தாடும் ஐந்து அம்பலக் கூத்தன்
வன்தொண்டருக்கு இவன் பிறைசூடிய பித்தன்
யட்சகனை மிதித்தாடும் ஐந்து அம்பலக் கூத்தன்
நக்கீரரிடம் நற்றமிழ் ஆடிய புலவன்
மதுரையம்பதியில் சொக்கன் எனும் அழகன்
மதுரையம்பதியில் சொக்கன் எனும் அழகன்
சிற்பத்து யானையை கரும்புண்ண வைத்த கிழவன்
வளநாடாம் சோழத்தில் இவன் ஊடையார் எனும் வளவன்
யமகிங்கரரும் பயந்தோடும் பூதப்படையின் தலைவன்
வளநாடாம் சோழத்தில் இவன் ஊடையார் எனும் வளவன்
யமகிங்கரரும் பயந்தோடும் பூதப்படையின் தலைவன்
நற்றமிழ் முருகனுக்கு தந்தையான சீடன்
மன்னன் ராசராசனுக்கு சிவன் காவிரி வளநாடன்
மன்னன் ராசராசனுக்கு சிவன் காவிரி வளநாடன்
சிரமெறிந்து அயனின் செருக்கெறிந்த பிறைசூடன்
வல்வில்லோன் அருச்சுனனை பொருதருளிய வேடன்
யயாதிதன் வழிவந்த ராமனுக்கு அருள் செய்த திருமந்திர காடன்
வல்வில்லோன் அருச்சுனனை பொருதருளிய வேடன்
யயாதிதன் வழிவந்த ராமனுக்கு அருள் செய்த திருமந்திர காடன்
நண்பர் சுந்தரருக்கு தூது சென்ற தென்னவா போற்றி
மருள்நீக்கியார் சூலைக்கு மருந்தானவா போற்றி
மருள்நீக்கியார் சூலைக்கு மருந்தானவா போற்றி
சிவஞானசம்பந்தர்க்கு பாலீந்த பிரமாபுர மன்னவா போற்றி
வக்ரமிகு அரசனிடம் வாதவூர்ப் பெருமானைக் காத்திட்ட அண்ணலே போற்றி
யசுர்சாமரிக் கதர்வண வேத முழுமுதற் பொருளே போற்றி
வக்ரமிகு அரசனிடம் வாதவூர்ப் பெருமானைக் காத்திட்ட அண்ணலே போற்றி
யசுர்சாமரிக் கதர்வண வேத முழுமுதற் பொருளே போற்றி
நம்பினோர்க்கு நன்மையை நல்கிடும் நாயகா போற்றி
மண்மிசை அடியார்கள் மாண்புற வைத்திடும் நாதனே போற்றி
மண்மிசை அடியார்கள் மாண்புற வைத்திடும் நாதனே போற்றி
சிந்தையுள் வைப்போர்க்கு நிந்தனை நீக்கிடும் நற்றவா போற்றி
வந்தனை செய்வோர்க்கு வரங்களை நல்கிடும் வேதவா போற்றி
யந்த்ர ரூபிணி மந்திர வேதினி அம்பிகாபதி ஆண்டவா போற்றி போற்றி
வந்தனை செய்வோர்க்கு வரங்களை நல்கிடும் வேதவா போற்றி
யந்த்ர ரூபிணி மந்திர வேதினி அம்பிகாபதி ஆண்டவா போற்றி போற்றி
Comments
Post a Comment