navaraathiri 8th song
திருவகுப்பில் 14 -வது வகுப்பு
வேல் வாங்கு வகுப்பு
17 -வது அடியிலிருந்து 22 -வது அடி வரை
அடவிப துஞ்சடை மவுலியில் வெம்பணி யம்பனி
யாமாங்கதர் வாமாங்கனை - 17
அனுபவை அம்பிகை அனுதிதை அம்பைத்ரி யம்பகி
ஆசம்பரை பாசாங்குசை - 18
அநகை அசஞ்சலை அதிகுண சுந்தரி அந்தரி
காலாந்தகி மேலாந்திரு - 19
அமலை அலங்க்ருதை அபிநய பங்குரை சங்கினி
மானாங்கனி ஞானங்குரை - 20
அணிமுக பந்திகள் சிறுபொறி சிந்தவி ளைந்தழல்
வாய்கான்றிடு நாகாங்கதை - 21
அபயவ ரம்புரி உபயக ரந்திகழ் அந்தணி
யாமாங்கறி தாய்மாண்பிநள் - 22
பொருள் :
அடவி படும் சடை மவுலியில் வெம்பணி அம்பணியாம் அங்கதர் வாம அங்கனை - காடு போன்ற சடைமுடியில் பிறைக் கலையையும் , கொடிய பாம்புகளையும் ஆபரணங்களாகச் சூடி ஊழித் தாண்டவம் ஆடும் கால சம்ஹார மூர்த்தியின் இட பாகம் இருப்பவள்
அநுபவை - நல்வினை தீவினை உணர்ச்சிகளானவள்
அம்பிகை - அனைவருக்கும் தாயானவள்
அநுதிதை - விவரிக்க முடியா பெருமையுடையவள்
அம்பை - பெருந்தாய்
த்ரியம்பகி - கண் மூன்றுடையாள்
ஆசம்பரை - திக்குகளியே ஆடையை அணிந்தவள்
பாசாங்குசை - பாசமும் அங்குசமும் ஏந்தியவள்
அநகை - குறையற்றவள்
அசஞ்சலை - களங்கம் இல்லாதவள்
அதிகுண சுந்தரி - மிகச்சிறந்த குணங்களை கொண்ட அழகி
அந்தரி -அந்தர வடிவினள் ( அந்தரம் - ஞான ஆகாயம் )
காலந்தகி - எமனையும் அழிக்க வல்லவள்
மேலாம் திரு - மேலான லட்சுமி தேவியானவள்
அமலை - மும்மலம் அற்றவள்
அலங்க்ருதை - பலவித அலங்காரங்கள் பூண்டவள்
அபிநய பங்குரை சங்கினி - பரத சாஸ்திரத்தின் இலக்கணத்தை பதவுரை செய்யும் தேவி ஆனவள்
மான் அங்கணி - மானைப் போன்ற விழி உள்ளவள்
ஞான அங்குரை - ஞானத்தின் முளை வித்து
அணிமுக பந்திகள் சிறுபொறி சிந்த விளைந்து அழல் வாய் கான்றிடு நாக அங்கதை - அழகிய பட வரிசைகள் தீப்பொறி சிந்தும்படி வெளிவரும் உம்ழவும் விழுங்கவும் செய்யும் பாம்புகளை அணிந்தவள்
அபய வரம் புரி உபய கரம் திகழ் அந்தணியாம் - அபயம் வரதம் இரண்டையும் காட்டும் கரங்களைக் கொண்ட மறையவள்.
ஆங்கு அறி தாய் மாண்பிநள் - அடியவர் தேவையை அறிந்தளிக்கும் தாயுள்ளம் கொண்டவள்.
14th vaguppu song in the THIRUVAGUPPU song group.
Vel Vaangu vaguppu
Verse 17th to verse 22th.
adaviba thunjadai mavuliyil vembaNi yambaNi
yaamaangkathar vaamaangkanai - 17
anubavai ambikai anuthithai ambaithri yambikai
aasambarai paasangkusai - 18
anakai asanjalai athikuna sunthari anthari
kaalanthaki melaanthiru - 19
amalai alangkruthai abhinaya pangkurai sangkini
maanagkani nyaanaangkurai - 20
animuga panthigal sirupori sinthavi lainthazhal
vaaikaandridu naagaangkathai - 21
abayava rampuri ubhayaka ranthikazh anthani
yaamaangkari thaaymaanbinal - 22
meaning:
adavi padum sadai mavuliyil vempani ambaniyaam angkathar vaama angkanai - she is being the left half of the lord shiva who wears half moon and venomous snakes as ornament on his bush like jata ( Hair)
anubavai - she is the one being the good and bad feelings of the universe
ambikai - she is the mother of all mothers
anuthithai - she is the one who cant be explained and prasied completely.
ambai - she is the mother for all sources
thriyambaki - she have three eyes
aasaambarai - she wears the all directions as her clothes.
paasaangkusai - she holds paasam ( the death rope) and angkusam ( a tool that used to control the elephant)
anagai - she without any default
asanjalai - she is the one without any defection
athiguna sunthari - she is one with with all the good values and most adorable.
anthari - she is being the universe of nyaana( ultimate knowledge)
kaalanthagi - she is the who able to prevent or even destroy the death of her devotees.
melaam thiru - she is the one who grants all the wealth and prosperity
amalai - she is the one without the three ultimate impurities
alangkruthai - she likes to adorn herself with plenty of alanggaarams( make ups)
abinaya pangkurai sangkini - she is the one who knows the meanings, in and out of the all the baratham dance
maan angkani - her eyes like the beautiful dears eyes.
nyaana angkurai - she is the primal seed of the ultimate nyaana
animuga panthigal sirupori sintha vilainthu azhal vaai kaandridu naaga angkathai - she is the one who is wearing the venomous, fire breathing snakes as her bangles
abaya varam puri ubaya karam thikazh anthaniyaam - her hands showing the signs of protections and blessings.
aangu ari thaay maaNbinal - she is the only one who knows when to gve what to her devotees.
திடவிய நெஞ்சுடை அடியர்இ டும்பைகெ டும்படி
ReplyDeleteதீயாங்குறை போயாழ்ந்தது 1
செயசெய என்றிசை பரவிய எங்கள்கொ டுங்கலி
தேசாந்தர மேசாய்ந்தது 2
செயலுரை நஞ்சுறழ் மயலுறு நெஞ்சினர் வஞ்சகர்
தீமான்கதர் தாமேங்கினர் 3
சிகரத ரங்கித மகரநெ ருங்குபெ ருங்கடல்
தீமூண்டுதன் வாய்மாண்டது 4
தெரியலர் சென்றடை திசைகளில் எண்கரி சிம்பெழ
மாறாங்கிரி நூறாந்தொளை 5
சிகரநெ டுங்கிரி குகைகள்தி றந்துதி கந்தமும்
லோகாந்தமு நீர்தேங்கின 6
சிறையுள் அழுந்திய குறைகள்ஒ ழிந்துசெ யங்கொடு
தேவேந்திரர் சேணாண்டனர் 7
திரிபுவ னங்களும் ஒருபயம் இன்றிவ ளங்கெழு
சீர்பூண்டற நேர்பூண்டன; 8
விடவச னஞ்சில பறையும்வி ரிஞ்சன்வி லங்கது
கால்பூண்டுதன் மேல்தீர்ந்தனன் 9
விகசித சுந்தர விதரண ஐந்தரு வெந்தெழில்
வீவான்பொழில் பூவாய்ந்தது 10
விழைவுத ரும்பத சசிதன்வி ளங்கிய மங்கல
நூல்வாங்குகி லாள்வாழ்ந்தனள் 11
வெருவி ஒதுங்கிமை யவரெவ ருஞ்சிறை வென்றித
மேலாம்படி யேமீண்டனர் 12
விழியொர்இ ரண்டொரு பதுசத நின்றெரி கண்டகன்
மேல்வாங்கிளை கால்சாய்ந்தது 13
வெளிமுழு துந்திசை முழுதும்வி ழுங்கி எழுங்கன
சூர்மாண்டற வேர்மாய்ந்தது 14
விபுதர் பயங்கெட நிருதர் தளங்கெட விண்கெடு
மேடாம்படி பாடோங்கின 15
மிடைகுறள் வெங்கொடி கழுகு பருந்து விருந்தென
ஊனார்ந்தகல் வானார்ந்தன; 16
அடவிப டுஞ்சடை மவுலியில் வெம்பணி யம்பணி
யாமாங்கதர் வாமாங்கனை 17
அநுபவை அம்பிகை அநுதிதை அம்பைத்ரி யம்பகி
ஆசாம்பரை பாசாங்குசை 18
அநகை அசஞ்சலை அதிகுண சுந்தரி அந்தரி
காலாந்தகி மேலாந்திரு 19
அமலை அலங்க்ருதை அபிநய பங்குரை சங்கினி
மானாங்கணி ஞானாங்குரை 20
அணிமுக பந்திகள் சிறுபொறி சிந்தவி ளைந்தழல்
வாய்கான்றிடு நாகாங்கதை 21
அபயவ ரம்புரி உபயக ரந்திகழ் அந்தணி
யாமாங்கறி தாய்மாண்பினள் 22
அதுலைத ருந்திரு மதலையி பங்கொள்ப யங்கொடு
பாய்மாண்கலை வாய்மாண்புன 23
அணிகுற மின்புணர் தணிகையில் அந்தணன் இந்திர
ராசாங்கம தாராய்ந்தவன்; 24
வடவையி டும்படி மணிமுடி பஞ்செழ விஞ்சிய
மாடாம்புடை நாடாண்டகை 25
வசைகரு துங்குரு பதியொடு தம்பிய ரும்பட
வேபாண்டவர் தேரூர்ந்தவன் 26
வளவில்வ ளர்ந்திடை மகளிர்கு விந்துத டங்குடை
வார்பூந்துகில் வார்பூம்பூயல் 27
வரைநிரை கன்றின முழுதும யங்கிய பண்கெழு
வேயேந்திய வாயான்கழல் 28
மருதிடை சென்றுயர் சகடுத டிந்தடர் வெம்புளை
வாய்கீண்டொரு பேய்காய்ந்தவன் 29
மதசயி லம்பொர வரவிடு நெஞ்சினில் வஞ்சக
மாமான்பகை கோமான்றிரு 30
மருகன் நிரம்பிய மதிமுக மஞ்சரி குஞ்சரி
வாகாம்பரை தோய்காங்கேயன் 31
மகபதி தன்பதி பகைகிழி யும்படி அன்றடல்
வாளோங்கிய வேல்வாங்கவே. 32 ...... வேல் வாங்கு வகுப்புக்கு முழு விளக்கம் எழுதவும்