மனிதநேயம்
மனிதநேயம் அன்று ... முல்லைக்கு தேர் கொடுத்து, பறவைக்கு தன்தசை கொடுத்து, மயிலுக்கு போர்வை கொடுத்து , மாட்டுக்கு நீதி கொடுத்து , மற்றவைக்கு தன்னையே கொடுக்க வைத்தது ... மனிதநேயம் இன்று.... ஈழத்துக்கு அரைநாள் உண்ணாவிரதம், பாலத்தீனத்துக்கு அரைமனது ஆதரவு, ரொகிங்கியாவுக்கு உச்சுகொட்டல், எண்ணெய்வள நாடுகளிடம் கரிசனம், மற்றவைகளுக்கு missed call கொடுக்க வைத்தது...