ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில்
ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில்
பெண்கள் சபரிமலை ஆற்றுகால்
புதுவாழ்க்கைக்கு வைக்குமது நாற்றுகால்
அம்மை புகழ் பாடி சாற்றுங்கால் - மற்றுமின்றி
அடியவர் பெருமையையும் அழகாய் போற்றுங்கால்
சிறியதாய் இருந்தாலும் ஒரு சிறுமையில்லாதவள்
பக்தர்கள் பதறினால் அமர்ந்திருக்கும் பொறுமையில்லாதவள்
அள்ளி அள்ளி கொடுப்பதில் கொஞ்சமும் வருமையில்லாதவள்
அப்படி கொடுத்தும் அங்கலாய்க்கும் தற்பெருமை யில்லாதவள்
குருத்தானமாய் சுவாமி சட்டம்பி திருவடிகள் - இறைவன்
வர்த்தமானமாய் பூமிக்கு வந்தவர் - இனமத
வேறுபாடுகளைக் மக்களிடம் களைய வந்தவர் - களைந்ததால்
இறைவனாகவே மக்களிடம் வளைய வந்தவர்
கும்பிட்டு வெளியில் வந்ததும் ஆசி தந்தாள் -
ஒரு கல்யாணத் திருக்காட்சி பார்க்கும் காட்சி தந்தாள்
யாத்திரைக்கு மங்கள குறியாய் கொண்டோம் - அது
பூர்த்தி பெற அவளாசியை சிரமேற்கொண்டோம்
கிளம்பினோம் நாங்கள் சீரலைவாய்
இப்பிறவி கடலை கடக்கும் நாவாய்
பிறந்தது முதல் பாவம் பல சுமந்த நாயாய்
இருக்கும் எனை ஆக்கும் பாடல் தரும் நாவாய்

Comments
Post a Comment