Thirvananthapuram
அனந்தபுரம்
அனந்த நகரம்
அரங்கன் உறங்கும் சிறந்த நகரம்
தியாகமே உருவான இயேசு எனும்
சிலுவையை சுமந்த சிகரம்
நிலுவையின்றி நீண்டு நிறைந்த நகரம்
வேட்டியிலும் மனத்திலும் ஏற்றியிருந்த வெள்ளையை
கேரளத்தார் கார்களிலும் ஏற்றியிருந்தனர்
குட்டிகளும் சேட்டன்களுமாய் சுற்றியிருந்தனர்
கொஞ்சம் நாகரீகத்தையும் தங்களுக்குள் ஏற்றியிருந்தனர்
காரம் அளவாய் உள்ள ஆகாரம்
அளவுக்கு அதிகமான பரோபகாரம்
மந்தகாசம் நிரம்பிய வசந்தகாலங்கள்
மௌனமாய் நடமாடும் இடம்
Comments
Post a Comment