கழுகுமலை
குமரிகண்டம் முழுதும் அமர்ந்த

குமரக்கந்தன் அரனார் சேந்தன்
குமரி முதல் குடகு வரையிலும்
குன்று தொடங்கி குகைகள் அனைத்திலும்
குடிகொண்ட குகநேசன் குடும்பமாய்
குடியமர்ந்த இடம் கழுகுமலை
சென்ற நேரம் ஆவணி சித்திரை
கழுகுமலையில் விழாக்கோல முத்திரை
எம்பெருமான் அழகில் பறிபோனது நித்திரை
இனிஎனை அவன்கண் மறைக்கக் கூடியது எத்திரை?
கழுகுமலையில் முடித்தோம் அந்தணத் தானம்
அந்தணர்க்கந்தணன் அமர்ந்திருக்கும் மலைத்தானம்
சூரசம்மார மூர்த்தியாகவே அவன் அத்தானம்
தேவியர் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்கும் அத்தானம்
பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன்
என்னத்தர்க்கத்தன் மதியணி செஞ்சடையன்
அப்பெருமானை பரவும் நெஞ்சடையன்
பகைவர்க்கு வெஞ்சினம் மிக்க நஞ்சனையன்
வெற்றிபெற வேண்டி
வெற்றிவேல் பெருமாட்க்கு
வைத்தான் ஒரு பெருங்கோவில்
வரியைக் குடைந்து ஓர் அருங்கோவில்
கழுகுமலை -
சூரசம்மார மூர்த்தியாய் என்னப்பன் ஒழுகுமலை
பத்தர்தம் பழவினைகள் பழுதாகி அழுகுமலை
சமணத்தை சமரின்றி சமன் செய்த அழகுமலை
சைவம் சார்ந்தாலும் ராமயணம் பழகுமலை
மலையே இறையாய் பார்ப்பது பழந்தமிழர் வழக்கம்
மலையைக் குடைந்து வைத்தான் இறைக்கு ஒரு வணக்கம்
மலைக்கும் அளவுக்கு இருக்கும் இக்கோயிலின் இணக்கம்
மலைக்கு மேலேயோ அப்பர் கால சமணப் புழக்கம்
மயிலேறிய மன்னவனின் மலரடி பணிந்தேன்
மனதுக்குள் அவனைஏற்றி ஏன் சென்னி குனிந்தேன்
மலைவலம் வந்த சோகை ஒருவாறு தணிந்தேன்
என்னப்பன் அருளால் இனி வெற்றிக்கு வித்திட்டு
பகையையும் பகைவரையும் முனிந்தேன்

கவிதை வடிவிலான அனுபப் பகிர்வு+ வெகு சிறப்பு நண்பரே.
ReplyDeleteNandri aiya
Deleteகவிதை வடிவிலான அனுபப் பகிர்வு+ வெகு சிறப்பு நண்பரே.
ReplyDelete