First day of Trip

யாத்திரை முதல் நாள்


வேல் காக்க

02/09/2015 மாலை மணி 8.00

மணி எட்டு
மனதில் எட்டு வைத்து
முருகனை மனத் தட்டில் வைத்து
விமானத்தினுள் எண்ணத்தை நிலை குத்த வைத்து
உட்கார்ந்து இருக்கிறேன்

வலப்புறம் வாழ்க்கையை தேடி
வண்ண வண்ண கனவுகளுடன் ஒருத்தர்
இடப்புறம் வாழ்க்கையில் விட்டதை
விடாது பிடிக்க இன்னொருத்தர்
இருபுறமும் சரிபார்த்தவாறே என் சிந்தனை
மறுபுறம் என் முருகனையும் குறிபார்க்கிறது

திருவனந்தபுரம்
தேம்பனைகள் அணைந்த புறம்
பத்மநாப சாமியை மணந்த புறம்
வாசல் தேடி வருகிறோம்
பூசல் ஏதும் காட்டாதிரு தாயே..



Comments