காவிரி
மருதமலை இறங்கி மகிழுந்தில் ஏறினோம்
மனமார முருகனுக்கு நன்றிகளைக் கூறினோம்
புகழ்சால் சோழம் நோக்கி வண்டியில் சீறினோம்
அவ்வண்டியில் செல்கையிலேயே சற்று இளைப்பாறினோம்
திருச்சியைத் தாண்டி வண்டி சென்றது
காவிரிப்படுகையில் நான் சொன்னதால் நின்றது
இந்நதிக்கரையில் தான் சோழம் நிலைநின்றது - இவளால்தான்
சோழப்படை கடல் தாண்டியும் சென்று வென்றது
வண்டியை விட்டு செருப்பைக் கழற்றி கீழே இறங்கினேன்
காவிரித்தாயின் அமைதியில் கொஞ்சம் கிறங்கினேன்
அவள் அண்மையில் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கினேன்
மண்டியிட்டு மனதார சோழம் சோழம் என்று முழங்கினேன்
அரவணி அண்ணல் அகத்தியர்க்கு அருளிய நிதியே
குறுமுனி கமண்டலம் கவிழக் கஜமுகன் திறந்திட்ட நதியே
தமிழ்பார் மக்களை காக்க விரிந்திட்ட நதிஉரு கொண்ட ரதியே
பன்னெடுங்காலம் சோழம் சோறுடைத்தது நீ செய்த விதியே
கனமிகு . கவின்மிகு காவிரித்தாயே !
கன்னடத்திலே பிறந்து தமிழகத்துக்கு முந்தி விரித்தாயே
காலமெல்லாம் தமிழினத்துக்கு தவறாமல் பந்தி விரித்தாயே
இப்போது மணற்கொள்ளையிலும் மழை பொய்க்கையிலும் சந்தி சிரித்தாயே!
பெருங்கொண்ட கரிகாலன் உனக்கு கல்லணைக் கட்டினான்
மும்முடிச் சோழன் உனக்கு பெரியகோயில் எனும் மணிமகுடம் சூட்டினான்
அவன்மகனும் குறையாது உனக்கென பல ஜெயஸ்தம்பம் நாட்டினான்
ஆனால் பார்த்தாயா ...
இப்போதைய நாகரீகத் தமிழன் உன்னை சத்தமில்லாமல் கற்பழித்துக் காட்டினான்?
என் பரம்பரையை பாதுகாத்த அன்னையே
உன் புகழ் மாட்சி முட்டித் தள்ளும் விண்ணையே
ஒருகாலத்தில் தரணி புகழ்ந்த இத்தஞ்சை மண்ணையே - இன்றும்
விடாது கட்டிக்காத்து வரும் நதித்தாய் எனும் நப்பினையே
பணிந்ததும் குனிந்து தொட்டேன் கரைமணலை - கரம்
குவிந்து மனதாரத் தொழுதேன் அவளை
நிமிர்ந்தே நொடி முகத்தில் தெறித்தது ஒரு நீர்த்திவலை - இப்பிள்ளைக்கு
உவந்து அவள் செய்த ஆசியின் அலை
அன்றிரவு
தஞ்சை எமக்குத் தஞ்சம் கொடுத்தது
குளித்ததும் கும்பிட்ட கை பேனா எடுத்தது
எடுத்ததுதான் தெரியும் கண்ணில் தூக்கம் வந்து கெடுத்தது
பிறகென்ன?
சூரியன் சுள்ளென்று சுட்டதும் தான் தெரிந்தது
நான் நாற்காலியிலேயே சுருண்டு படுத்தது.

Comments
Post a Comment