மருதமலை
தாண்டியது வண்டி திண்டுகல்லை
சேர்ந்தோம் நாங்கள் கோவையின் எல்லை
ஏனுங்க்னா எனும் மரியாதை மிகு சொல்லை
பலமுறை கேட்டும் காது சலிக்கவில்லை
இரைச்சலாய் இருந்தாலும் வரவேற்றது கோவை
மதிய உணவுதான் எமக்கப்போதைய தேவை
ஆர்வீ உணவகத்தில் கொஞ்சம் காலம் தாழ்த்திய சேவை
இருப்பினும் மிகச் சுவையான உணவு நனைத்தது நாவை
உண்டதும் கிளம்பினோம் மருதமலை நோக்கி
சரியாக வழிகாட்டினார் ஒரு தொப்பையில்லா காக்கி
நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருந்தோம் தேக்கி
இனி என்னப்பன் முன்னின்று கொட்டுவதுதான் பாக்கி
மலைகளில் சிறந்த மலை மருதமலை - என்று
கவியரசு பாடிய வார்த்தை வீண்போகலை
வரவேற்றதெம்மை பணிக்காற்றோடு மழைநீர் திவலை
அதிலேயே பாதி கரைந்தது மனதிலுள்ள கவலை
முதலில் பார்த்தது ஆதிமூல சன்னிதானம்
இங்குதான் பாம்பாட்டியார் வேலனைப் பூசித்தார் அனுதினம்
தம்பதி சமேத முருகன் போட்டிருந்த காப்பு சந்தனம்
பருகி கொண்டே இருக்கலாம் அவ்வமைதியை தினம்தினம்
கருவறை முருகன் அணிந்திருந்தான் வெள்ளி கவசம்
அவன் அருட்பார்வை நடத்தியதென் மனக்கேதத்தின் திவசம்
அங்கயே நின்று பாடினேன் கந்தர் சஷ்டி கவசம்
நான் எந்நாளும் எடுத்தோதும் தேவராயரின் உவசம்
பிறகு கீழிறங்கி செல்கையில் பின்பக்கம்
தெரிந்தது கன்னிமார்களின் திருவோலக்கம்
மென்மையான காற்றின் திண்மையான தாக்கம்
அதனால் மெருகேறியது மேலும் மனதளவில் ஊக்கம்
அங்கிருந்து மீண்டும் கீழிறங்குகையில்
அமர்ந்திருந்தார் பாம்பாட்டியார் சிலையாய் ஒரு குகையில்
அதிலெழுந்த குங்கிலிய சாம்பிராணி புகையில்
மனங்கொண்ட அமைதி சொல்ல என்வார்த்தைக்கு வகையில்

Comments
Post a Comment