பாரதியார் வீடு
தமிழ் வளர்த்த சிங்கம் - பின்னர்
அந்தச் சிங்கம் வளர்ந்து வளர்த்தது தமிழ்
தமிழுக்கு அது ஊற்றி வளர்த்தது எரியுமிழ்
முண்டாசு கட்டு
முறுக்கு மீசை
மடித்த வேட்டி
மங்காத தேஜஸ்
புளியோதரை சாப்பிட்ட புலி - பறங்கியர்க்கு
புளியை வயிற்றில் கரைத்த கரும்புலி
கரும்புலி என்றால் தற்கொலைப்படை புலியல்ல
கருப்பங்கி அணிந்து சமுதாயத்தை வெளுத்த புலி
புன்னகை என்றும் மங்காத அம்புலி
வார்த்தையாலேயே வெள்ளையரை சிக்சர் அடிக்கும் கங்குலி
எட்டையபுரம் - தமிழ் வளர்த்த
பெரும் பட்டையபுரம்
சென்று பார்த்தேன் அவன் வீட்டை
சொற்போர் புரிந்த பாடிவீட்டை
நிஜம் மாறியிருந்ததால் - அதன்
நிறம் மாறியிருந்தது
கவியரசனின் அத்தாணி மண்டபம் - அவன்
ஆட்சி நடத்திய எழுத்தாணி மண்டபம்
அவன் நடந்தது மனத்திரையில் நடந்தேறியது
அவன் கர்ஜனை காதுக்குள் ரீங்காரம் கூறியது
இப்படித்தான் இருந்திருக்கும் இம்மகாகவியின் அரசவை
என்று என் மனதுக்குள் ஒரு குரல் கட்டியம் கூறியது
அவன் நடந்த இடத்தை தொட்டு நிமிர்ந்தேன்
அவனைப் பற்றிய சிந்தனைக்குள் சிறிது அமிழ்ந்தேன்
அவனைப் பார்க்க இயலா என் ஈனப்பிறவியை எண்ணி உமிழ்ந்தேன்
அவனோடு நான் தமிழாட முடியா நிலைமை எண்ணி தலை கவிழ்ந்தேன்
விரைந்தேன்
என் கந்தவேளை எண்ணி கரைந்தேன்
கழுகுமலைக்குச் செல்ல விழைந்தேன்

Comments
Post a Comment