தூத்துக்குடி

சூரியன் மேற்கில் சென்று அமிழ்ந்தது கடலுள்
களைப்பும் சோர்வும் ஒருசேரப் போந்தது உடலுள்
கொஞ்சமாய் பசியின் தாக்கம் எடுத்தது குடலுள்
அடைந்தோம் நாங்கள் தூத்துக்குடி எனும் படலுள்

தூத்துக்குடி
தாமிர பரணி படுகையில் விளைந்த சாத்துக்குடி
எவ்வளவு வெயில் அடித்தாலும் கொஞ்சம்
குளிர்ப்போர்வை இரவில் போர்த்திவிடும் அடிக்கடி
அண்டவில்லை எங்களை ஒருபோதும் கொசுக்கடி

முதுக்குளிப்புக்கு பேர்போன ஊர்
மூட்டை உப்புக்கும் பேர் போன ஊர்
மக்கள் மனதும் உப்பின் வெள்ளைக்கு நேர்
அனல் பொங்கினாலோ தாங்காது பார்

இரவு தனிந்தது இங்குள்
கிளம்பிச் சிரித்தது கங்குல்
நாங்களும் கிளம்பினோம் தூத்துக்குடி நீங்கி
இன்ன பிற திருதலங்களை காண ஏங்கி 

Comments