திருச்செந்தூர்

குலசையிலிருந்து கிளம்பிய சமயம்
மாலை ஆகிக் கொண்டிருந்தது மதியம்
மூவரும் தேவரும் மனமார துதியும்
வானவர்க்கு மேலான் செந்திலம்பதியும்
ஆனது எங்கள் கண் முன் உதயம்

காரில் கழற்றினோம் செருப்பை
உளமார வணங்கினோம் கந்தமாதன பொருப்பை
கடல்மூழ்கிக் கழுவினோம் அகம் புறம் உள்ள உறுப்பை
உள்ளத்தில் உள்ள தீயென்னும் அருவறுப்பை

சென்று காணிக்கையாய் இறக்கினேன் முடி
நண்பர் குழாம் சுற்றி நின்றது சிரித்தபடி
முடியை முடித்ததும் நான் எடுத்து வைத்த அடுத்த அடி
சென்றது நாழிக்கிணற்றை நோக்கிய படி

மனச்சுமை நீரோடு கரைய நடந்தேன் அவன் வாயிற்படி
அவன் நாமம் என் நாவில் கொண்டது குடி
செந்திலம்பதியை நினைத்தாலே சிறக்கும் குடி - என்பதைச்
சொல்லியபடி பறந்ததவன் குக்குடக் கொடி


என்னப்பனே !
என்னய்யனே !
என் உடலுக்கும் உணர்வுக்கும் உணவான மெய்யனே !
பன்னிரு கையனே !
பணிபவர் பிணியை பனியெனக் கரைக்கும் பரிதியத்தகையனே!
பனிமலைத்தலையன் பையனே!
வேண்டுவோர் வேண்டுவதை மறுபடி வேண்டா வண்ணம்
வேண்டும் வேண்டும் என வழங்கி மகில்ழும் சுப்பையனே!
வேதத்தின் நாதமான மெய்யனே !
அழுகிறேன் இங்கே நாயினும் கடைய பொய்யனே !

வந்தேன் சீரலைவாய்
வந்தென் துயர்களைவாய்
தந்தேன் எனமொழிவாய்
தந்தென் பிணியொழிவாய்
உழன்றேன் தீ உலைவாய்
எனக்கு நீயே கடைவாய்
இக்கிறுக்கனின் எண்திசைக்கும் நீயே தளவாய்
இந்நாயேனின்  அவா அருள தேவே நீ விழைவாய் !

செந்திலாண்டவா...!
இன்னும் உருகி வேண்டாவா?
இல்லை எனக்கு நானே குழி தோண்டவா?
தத்தைகளோடு மயில் மேல் தததத்தை ஆடும் தாண்டவா
தாண்டவ தெய்வத்தின் தழல் விழிகளில் மூண்டவா
நீயல்லாலென் உடல் வெறுத்து இப்பூவுலகம் தாண்டவா?
இல்லை... உன்னை மிஞ்சிய தெய்வமில்லை என்று
துண்டு போட்டு தாண்டவா?


தெண்டனிட்டு உகுத்தேன் கண்ணீர்
இன்னும் மீதமிருப்பது என் செந்நீர்
அதுவும் உனக்கு ஆகுமா பன்னீர் ?
அதுவரைக்கும் விதி போக நீர் வொன்னீர்

மாதவா
செந்தில் ஆதவா
வேதங்கள் காக்கும் வேதவா
உயிர்கள் எனும் பசுக்களை மேய்க்கும் யாதவா

வா..
தரவா ...
இல்லை உன்னிடமே நான் வரவா?







Comments