மதுரை
அடுத்து தொடங்கிய என் தேடல்
முடிந்த இடம் நான்மாடக் கூடல்
முக்கண்ணன் அடிய அறுபத்துநான்கு திருவிளையாடல்
அங்கு நடந்ததால் ஆகியது அதன் சிறப்பு கூடல்
பாண்டியன் இமயவரம்பனின் சுதை தடாதகை
மூன்று தனங்களோடு யாகத்தில் தோன்றிய பெருந்தகை
இதனால் மனமுடைந்து பாண்டியன் வருந்துகைக்
கண்டு ஆறுதல் சொல்லியது அனைத்தையும்
வென்று, நன்று மென்று உள்ளடக்கிய அகத்தியர்
எனும் அளவிட முடியாத குறுந்தொகை
முக்கண்ணான் பார்வை பட்டதும்
மூன்றில் ஒன்று பூமிபடும்
அது நடக்க பாடு படும்
என மொழிந்தது அந்த பெரும்பீடும்
ஆண்டாண்டு காலம் அண்டாதியண்டம்
ஆளும் ஆலால கண்டம்
பாண்டி மண்டலம் முழுதும் ஆண்டகையாகும்
வருவான் சிவனே உனக்கு மருமானாய்
குறுமுனி மொழிந்தான் நிமித்தம்
அவைமுழுதும் ஒழிந்தது நிசப்தம்
இனி வாளாவிருக்கும் ஒவ்வொரு கணமும் அபத்தம்
என் வாரியெடுத்து குழவிக்கு வைத்தான் கோடிமுத்தம்
இப்படித்தான் ஆரம்பித்தது மதுரை நிமிர்ந்த படலம்
தலை தடாதகை என்றால் மதுரை உடலம்
அவள் இல்லையேல் மதுரை மட்டுமல்ல மண்ணுலகே சடலம்
இதற்கு விண்ணும் மண்ணும் ஆகும் சாட்சிப் படலம்
சூடினாள் எம்பேரரசி மீனாட்சியாள் மணிமுடி
வாழ்ந்து செழித்து வளர்ந்தோங்கியது குடி
பாரெங்கும் தமிழ் பக்தியின் நெடி
பறந்து விரிந்தது பாதாளத்தின் அடி
அரவணி அண்ணலும் அசராமல் நிகழ்த்தினான் அறுபத்து நான்கு திருவிளையாடலை
அயர்ந்து அமர விடவில்லை அந்த நான்மாடக் கூடலை
சுமந்தான் பிட்டுக்கு மண் - பிறகு
சுமந்தான் விறகு, கிடைத்தது பண் - நரியை
பரியாக்கினான் மன்னன் முன் - கல்லானையைக்
கரும்புண்ணச் செய்தது அவன் கண்
நால்வரும் நயந்து பாடிய மதுரையம்பதி
நானிலம் சிறக்க தமிழ் வளர்த்த அரும்பெரும்பதி
நாயக்கர் காலத்திலும் வாழ்ந்திருந்த செழும்பதி
அதற்கு காரணம் சொக்கன் மீனாள் எனும் தம்பதி
அத்தகு மதுரையில் கண்டேன் என் கண்ணுக்கு இனியாளை
தேமதுரத் தமிழ் வளர்த்த மதுரைக்கும் இனியாளை
பத்தரும் பரமரும் அன்றி வேறொரு தாள் பணியாளை
எவ்வளவு உள்ளினும் தீஞ்சுவை இன்பம் தனியாளை
கணநேரமே மீனாட்சி கொடுத்தாள் காட்சி
நின்றருள் செய்து அனுப்பியது சொக்கனின் மாட்சி
சொற்பநேரமே இருந்தாலும் நக்கீரரின் மீட்சி
மீண்டும் படம் போல மனதுள் ஓடியது பொற்றாமரைக் குளத்தின் முன்.
அதற்கு அக்குளத்து மீன்களே சாட்சி.
சொக்கன் பாகம் பிரியாளிடம்
நானும் பிரியாவிடை பெற்றேன் - அவளையென்
மனத்திலும் பிரியாவரம் பெற்றேன்
அடுத்து நான் சென்றது யோசித்தபடி
தமிழ் தந்த என்னைய்யன் கோபித்து நின்ற திருவடி
அகத்தியராலும் போகராலும் சிறந்த திருவாவினன் குடி
மனதார அவனை நினைத்தேன் முருகா முருகா என செபித்தபடி

Comments
Post a Comment